திமுக நிர்வாகி தங்கத்தமிழ்ச் செல்வனுக்கு மேகமலையில் ஒரு எஸ்டேட் இருப்பதாக கூடலூர் நகர செயலாளர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். தேனி மாவட்டம், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார் இதுகுறித்து கூறுகையில், ’’தேனி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த போது, மேகமலையில் தனது பெயரில் எஸ்டேட் ஒன்றை வாங்கினார். ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அவரிடம் இருக்கின்றன. 2 ஆயிரம் கோடி ஊழல் செய்து, கேரளாவில் சொத்து சேர்த்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது மலையாள நாளிதழில் அவர் கூறியுள்ளார்.


 
திமுக நிர்வாகியான தங்கத்தமிழ்ச் செல்வன் சம்பாதித்த சொத்துக்களின் விபரங்களை பட்டியலிட நான் தயாராக இருக்கிறேன். இவர் எப்படி துணை முதலமைச்சரை குறை சொல்ல முடியும்’’என கேள்வி எழுப்பியுள்ளார்.