கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி நிஜாமுதீனில் மத ஆலோசனை மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டோரில் சுமார் 30 சதவீதம் பேருக்கு டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு காரணமாக 17 மாநிலங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தப்லீக் ஜமாத் தார் மாநாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களும் கலந்து கொண்டிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. மியான்மரை சேர்ந்த இவர்கள் அகதிகளாக டெல்லி, ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள முகாம் களில் தங்கியிருந்தவர்கள் என கூற்டுகிறது.

 

இவர்கள் அனைவரும் தப்லீக் கூட்டம் முடித்து தலைமையகத்தில் இருந்து கிளம்பி விட்டனர். இருப்பினும் அவர்கள் அகதிகள் முகாம்களுக்கு திரும்பியதாகத் தெரியவில்லை. எனவே, அவர்களை தற்போது டெல்லி காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்களில் ஒருவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அது மேலும் பலருக்கு பரவ வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி காவல் துறை வட்டாரத்தினர் கூறும் போது, ''ரோஹிங்கியாவினர் எண்ணிக்கை குறித்த பதிவேடுகள் அவர்கள் முகாம்களில் உள்ளன. இவற்றில், தப்லீக் ஜமாத்துக்கு சென்றவர்கள், திரும்பி வந்தவர்களின் குறிப்புகள் எதுவும் இல்லை. எனினும், அவர்களும் மாநாட்டுக்கு வந்ததாக தப்லீக் ஜமாத் தகவல் அளித்ததால் அவர்களை தேடி வருகிறோம். இவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் தொடர்பு எண்களும் அவர்களிடம் இருப்பதில்லை. இதனால் அவர்களை கண்டறிவிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது'' என கூறி அதிர்ச்சியூட்டுகின்றனர்.