R.K.Nagar election is not by election it is buy election
சென்னை ஆர்.கே.நகரில் நடந்தது By-Election இல்லை !! Buy –Election என்றும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி டி.டி.வி.தினகரன் மற்றும் ஆளும் அதிமுக ஆகியோர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் மதுசூதனன் தவிர , திமுகவின் மருது கணேஷ். நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், பாஜகவின் கரு.நாகராஜன் ஆகியோர் டெபாசிட் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தனர்.
அதிலும் பாஜக . நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளைவிட குறைவாக பெற்றது. இதனை நாடு முழுவதும் கிண்டலாக பார்த்தனர். இது தொடர்பான மீம்ஸ்கள் வைரலாக பரவின.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழிசை. ஆர்,கே,நகர் இடைத் தேர்தல் போன்று ஒரு மோசமான தேர்தல் இந்தியாவிலேயே நடந்திருக்காது என குறிப்பிட்டார்.
தொகுதி முழுவதும் திட்டமிட்டு டி.டி.வி.தினகரனின் ஆட்கள் பணம் செய்தது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாகிவிட்டதாக தெரிவித்தார். இடைத் தேர்தல் தொடங்கியதில் இருந்தே பணப்பட்டுவாடா நடந்து வருவதாக குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டினார்.
ஆர்.கே.நகரில் நடைபெற்றது By-Election இல்லை !! Buy –Election என்றும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி டி.டி.வி.தினகரன் மற்றும் ஆளும் அதிமுக ஆகியோர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டனர் என தமிழிசை குற்றம்சாட்டினார்.
