rk nagar election on april 12

இன்னும் சரியாக 30 நாளில் ஆர்.கே.நகரில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக முதல்வராகவும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ஜெயலலிதா டிச. 5 ஆம் தேதி மரணமடைந்ததால் அத்தொகுதி காலியானது.

எப்ரல் 12ஆம் தேதி இத்தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்னும் ஒரிரு நாட்களில் அதாவது வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.23ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.

வேட்புமனுவுக்கான பரிசீலனை 24ஆம் தேதி நடைபெறுகிறது.வேட்புமனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் 27ஆம் தேதியாகும்.

இப்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்துள்ளதால் களத்தில் குதிக்க தயாராகி விட்டன அரசியல் கட்சிகள்.

திமுக எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என துடித்து கொண்டிருக்கிறது.

ஆர்.கே. நகர் மக்களுடைய சாய்ஸாக தீபா உள்ளார். ஆனால் அவரது அமைப்புக்குள் நடக்கும் அடிதடிகளை பார்த்தால் வேட்புமனு தாக்கல் செய்வர்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஓபிஎஸ் அணியில் உள்ள மதுசூதனனுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி அது என்பதால் அவர்களும் கச்சை கட்டி கொண்டு இறங்குகிறார்கள்.

மறுபக்கம் சசிகலா அணியிலிருந்தும் ஸ்டார் வேட்பாளரை நிறுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

12ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு ஏப் 15ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

ஏப் 15ஆம் தேதி பகல் 1 மணிக்கு தெரிந்து விடும் தமிழகத்தின் எதிர்கால அரசியல் ட்ரென்ட் யார் பக்கம் உள்ளது என்பது.