Asianet News TamilAsianet News Tamil

தினகரனை திணறடிக்க, ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்க.. ஆர்.கே.நகரில் களமிறங்கும் விந்தியா.. அதிமுகவின் அதிரடி அரசியல்

திமுக, அமமுகவை சமாளிக்க ஆர்.கே.நகர் தொகுதியில் நட்சத்திர அந்தஸ்துடைய வேட்பாளரான விந்தியாவை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. 

RK Nagar constituency...Actress Vindhya will contest
Author
Chennai, First Published Feb 17, 2021, 11:53 AM IST

திமுக, அமமுகவை சமாளிக்க ஆர்.கே.நகர் தொகுதியில் நட்சத்திர அந்தஸ்துடைய வேட்பாளரான விந்தியாவை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. 

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் மற்றும் யார் வேட்பாளர் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாஜகவுக்கு 20 சீட்டுக்களும், பாமகவுக்கு 21 சீட்களும், தேமுதிகவுக்கு 14 சீட்டுகளும், தமாகாவுக்கு 5 சீட்டுகளும், மற்ற கட்சிகளுக்கு 3 சீட்டுகளும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. மீதம் உள்ள 171 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாக களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

RK Nagar constituency...Actress Vindhya will contest

குறிப்பாக அதிமுக கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகள் மற்றும் திமுக வேட்பாளர்களுடன் நேரில் மோத அதிமுக திட்டமிட்டுள்ளது. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை தவிர்த்து அதிமுகவில் நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இதில், நடிகை விந்தியாவுக்கு ஆர்.கே.நகரில் போட்டியிட வைக்க தலைமை திட்டமிட்டுள்ளது.

RK Nagar constituency...Actress Vindhya will contest

ஜெயலலிதா மீது அளவு கடந்த அன்பு, பாசம், பற்று, மரியாதை காரணமாகத்தான் அ.தி.மு.க.வில் தன்னை ஆரம்பத்தில் இணைத்து கொண்டவர் விந்தியா. ஜெயலலிதா தன்னுடைய ரோல் மாடல் என்று அடிக்கடி சொல்வார். பேச்சு, பிரசாரம் என்று எடுத்து கொண்டால் ஆரம்பத்தில் தட்டு தடுமாறிதான் தமிழில் பேசினார். இருந்தாலும் விந்தியா பேச்சை அ.தி.மு.க. தொண்டர்கள் ரசிக்கவே செய்தனர். ஜெயலலிதா இறந்த பிறகு எத்தனையோ பேர் கட்சியில் இருந்து பிரிந்து போய் விட்டனர். பலர் கட்சி மாறி விட்டனர்.

RK Nagar constituency...Actress Vindhya will contest

ஆனால், விந்தியா இப்போதும் அதிமுகவில் நீடிக்கிறார். எப்போது பிரசாரம் என்றாலும் சமாதிக்கு போய் ஜெயலலிதாவின் ஆசியை பெற்றுக்கொண்டு களத்தில் இறங்குவது இவரது வாடிக்கை. சமீபத்தில்தான் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளர் என்ற பொறுப்பில் இருந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற பதவி உயர்வு கிடைத்தது. ஆகையால், இந்த முறை திமுக, அமமுகவை சமாளிக்க ஆர்.கே.நகர் தொகுதியில் விந்தியாவை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios