தமிழக மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டியிருந்தால் ரஜினியுடன் இணைந்து பயணிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். 

இந்த நிலையில் சற்று முன்பு  நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம் என தெறிக்க விட்டார்.

ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு நான் கருத்து கூற விரும்பவில்லை” என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்..  

தேவைப்பட்டால் இணைவோம் என்று நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தனித்தனியே பேட்டி அளித்துள்ளது  தமிழக அரசியல் வட்டாரத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.