அரசியல் ஆதாயத்துக்காக கமல்ஹாசனை இந்துக்களுக்கு எதிராக பேச வைத்ததே பி.ஜே.பி.தான்! என்று விமர்சனங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதே கமல்ஹாசனை திட்டுவது போல் அக்கட்சி சீன் போடுவதாகவும் இன்னொரு பக்கம் பொளக்கின்றன விமர்சனங்கள். 

பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் கமல்ஹாசனால் வெடித்திருக்கும் ‘இந்து தீவிரவாதி’ விவகாரம் குறித்து வாய் திறந்திருக்கிறார்.  அதில் “நல்ல ஹிந்து என்று ஒருவரை அடையாளப்படுத்திட வேண்டுமென்றால் தாராளமாக காந்தியை குறிப்பிடலாம். ஆனால், எதிர்மறையான ஒருவரை இந்து என குறிப்பிட்டு கமல்ஹாசன் இந்துக்களை இழிவு படுத்தி இருக்கிறார். 

அரவக்குறிச்சியில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளதால், இப்படி பேசினால் தன் கட்சிக்கு அதிக இஸ்லாமிய வாக்குகள் கிடைக்கும் என நினைத்துப் பேசியிருக்கிறார். சந்தர்ப்பவாதி. 

கமல் திருந்துவார் என நினைத்தோம், எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மாறவில்லை, தொடர்ந்து குழப்பமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்.” என்று கடிந்து பேசியுள்ளார். 

இந்நிலையில், இல.கணேசனின் இந்த ரியாக்‌ஷனுக்கு ரீ ரியாக்‌ஷன் காட்டியிருக்கும் விமர்சகர்கள் ‘கமலை வெச்சு ஒரு டிராமா ஏற்பாடு பண்ணி, அவருக்கு டயலாக் பேப்பர் எழுதி கொடுத்ததே உங்க கட்சிதான். இப்படி செய்றதையும் செஞ்சுட்டு, சின்னப்புள்ளை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டா நாங்க நம்பிடுவோமா? இப்படியெல்லாம் டபுள் ஃபேஸ் காட்டாதீங்க பாஸ். ” என்கிறார்கள். 

இன்னா அரசியலோ போங்கப்பா!