Asianet News Tamil

சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு சொத்தை தானம் கொடுத்த ஒரு இந்து..!! ஓய்வு பெற்ற நீதிபதி வெளியிட்ட நெகிழ்ச்சி..

அவர் என்ன அப்படி தப்பான கருத்தைக் கூறிவிட்டார்கள்.  கோயில் உண்டியலில் தானம் செய்வது போல் கல்விக்கும் தானமளிப்பீர் என்றுதானே கூறினார் ?

retired judge chandru support to actress jothika  regarding her statement education
Author
Chennai, First Published Apr 29, 2020, 4:10 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கோவிலை அக்கறையுடன் பராமரிப்பது போல பள்ளிக்கூடங்களையும் பராமரிக்க வேண்டும் அதற்கும்  நிதி கொடுக்க வேண்டும் என ஜோதிகா கூறியதற்கு பல இந்து அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  இந்நிலையில் இது குறித்து கருத்து  தெரிவித்துள்ள ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு,  ஒரு இந்து தனக்கென இருந்த சொத்தை கோவில்களுக்கு தராமல்  நடிகர் சூரியாவின் அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளார் , இதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.?  இது குறித்து சந்துரு சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ளதாவது,   உடுப்பி கோபாலகிருஷ்ணன் எனபவர்  ஒரு பாட்டு கற்று தரும் ஆசிரியர். தீவிர கடவுள் நம்பிக்கையுள்ளவர்!  மிகவும் எளிய  குடும்பத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு குடியேறினார். 

தனது உழைப்பில் கிடைத்த பணத்தில் செங்கல்பட்டு  மாவட்டத்தில் தனது சேமிப்பு பணத்தில் குறைந்த  விலையில்  (4) நான்கு கிரவுண்ட் வீட்டுமனை நிலத்தை 1980களில் வாங்கி வைத்திருந்தார். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் பத்து லட்சம்  ரூபாய் தனது வயதானகாலத்தில் தனது மகளுடன் வசிக்க பெங்களூருக்கு குடிபெயர்ந்தார் அவர் , தனது  நெடுநாளைய நண்பர் என்பதால்  தன் மீது அன்பும் மரியாதையையும் வைத்திருப்பவர். இந்நிலையில் அந்த நண்பர் தனக்கு போன் செய்ததுடன்  அவர் தன்னிடம், தனக்கு வயதாகி விட்டதால் தனது இறுதிகாலத்தைப் பார்த்துக்கொள்ள போதுமான சேமிப்பு வைத்திருப்பதாகவும் இந்நிலையில் தனக்கு செங்கல்பட்டு  மாவட்டத்திலுள்ள தன் காலிமனையை ஏதேனும் தர்ம காரியத்திற்கு கொடுக்க நினைக்கிறேன் என அவர் தெரிவித்ததுடன்,  அதை கோவிலுக்கு கொடுப்பதற்கு பதிலாக    ஏழை மக்களின் கல்வி செலவுக்கு  உதவும் வகையில் அதை கொடுக்க விரும்புகிறேன் எனவே உங்களது அனுபவத்தில் அப்படி கல்விப்பணி மிகுந்த அமைப்பின் பெயரைக் கூறினால் அவர்களுக்கு தானமாக கொடுத்துவிடுவேன். 

எனவும் அதில் அவரது   மனைவிக்கும் முழு சம்மதமே  எனவும் கூறி அவர்களையும் என்னிடம் பேசவைத்தார்.  உடனே நான் "அகரம் அறக்கட்டளை"பற்றி கூறினேன்.அதற்கு கோபாலகிருஷ்ணன் சம்மதித்தார்.  பிறகு தானப்பத்திரம் தயாரானது . தான் முதல் சாட்சியான கையெழுத்திட்டதாகவும் கொரானா காலத்திலேயே மார்ச் 13 ஆம் தேதி  பத்திரம் பதிவிடப்பட்டது. உடல்நிலை குன்றியிருந்தபோதும் பெங்களூரிலிருந்து ரயிலில் வந்து கையெழுத்திட்டார். மூல பத்திரங்களை அகரம் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். படப்பிடிப்பிலிருந்த நடிகர் சூர்யா அலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார். இதில் விந்தை யென்னவென்றால் இதுவரை உடுப்பி கோபாலகிருஷ்ணன் சூர்யாவை படத்தில் கூட பார்த்ததில்லை.   அவர் கன்னடக்காரர் ,வசதி அதிகமில்லை என்றாலும் பத்துலட்ச ரூபாய மதிப்புள்ள மனையை கல்விப்பணிக்காக அளித்த கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள்  நம்முடன் இருக்கிறார்கள் என்பதில் நமக்கு எவ்வளவு பெருமை. 

நான் ஏன் இந்த நிகழ்வை இங்கு விரிவாகப் பதிகிறேன் என்றால் இன்று சில சக்திகள் ஜோதிகாவிற் கெதிராக முகநூலில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மிரட்டவும் செய்கிறார்கள். அவர் என்ன அப்படி தப்பான கருத்தைக் கூறிவிட்டார்கள்.  கோயில் உண்டியலில் தானம் செய்வது போல் கல்விக்கும் தானமளிப்பீர் என்றுதானே கூறினார் ?உடுப்பி கோபாலகிருஷ்ணன் இறைபற்றாளர். அவர் ஜோதிகா சொன்னதை கேட்டவரில்லை. ஆனால்  முன் வந்து சமய காரியங்களுக்கு வேண்டாம்! ஏழைகளின் கல்விக்கு கொடுங்கள் என்று கூறியதோடுஅவர் சக்திக்கும் அப்பாற்பட்டு பத்து லட்சம் ரூபாய்க்கு தான் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு இரண்டாம் வகுப்பில் பெங்களூருக்கு இரவு ரயில் ஏறினாரே!எது இறைபணி என்று எல்லோருக்கும் தெரியும்  ஜோதிகாவை நீங்கள் மிரட்டலாம்! ஆனால் உடுப்பி கோபாலகிருஷ்ணர்கள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள் என சந்துரு தெரிவித்துள்ளார்.  

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios