சென்னை, வானகரத்தில் இன்று காலை 10.35க்கு தொடங்கிய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
அந்த 12 தீர்மானங்கள் விவரம்:

தீர்மானம் 1: இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது.

தீர்மானம் 2: ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்வார்கள்.

தீர்மானம் 3: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு 
பாராட்டு.

தீர்மானம் 4: ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல்

தீர்மானம் 5: வர்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தல்

தீர்மானம் 6: விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி  தெரிவித்தல்

தீர்மானம் 7: பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து 

தீர்மானம் 8: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே!

தீர்மானம் 9: பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட அனைத்து பொதுக்குழு அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும்

தீர்மானம் 10: டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது.

தீர்மானம் 11: அதிமுக வழிகாட்டுக் குழுவில் 11 ர் இடம்பெற பொதுக்குழுவில் ஒப்புதல்

 தீர்மானம் 12: பொதுச்செயலாளர் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ்.க்கு வழங்கப்படும்.

இந்த 12 தீர்மானங்கள்  இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி  இரு அணிகள் இணைப்பின் போது, கட்சி ஓபிஎஸ்க்கு ஆட்சி ஈபிஎஸ்க்கு என்ற கோஷம் எழுப்பப் பட்டது. அது இப்போது இந்தக் கூட்டத்தில் எதிரொலித்துள்ளது. 

கட்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் அதிகாரத்தை ஓபிஎஸ் பெற்றிருக்கிறார். இணை ஒருங்கிணைப்பாளர் என எடப்பாடி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆட்சியில் முதல்வர் பதவி எடப்பாடிக்கும், துணைமுதல்வர் என ஓபிஎஸ்ஸுக்கும் என ஒதுக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.⁠⁠⁠⁠