இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘’27 சதவிகித இட ஒதுக்கீட்டு நாயகர் வி.பி. சிங் அவர்களின் 11-ஆவது நினைவு நாள் இன்று. அவரது வழியில் பயணித்து அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை பாதுகாக்க பாடுபடுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.

பி.எஸ்.எல்.வி-சி 47 ஏவுகலன் மூலம் இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக் கோள் மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்! மேலும் சாதனை படைக்க வாழ்த்துகள்!!

அரசு பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு வரை ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கப்படவிருப்பது பாராட்டத்தக்கது. மாணவர்களுக்கு ஆங்கில அறிவும், பேச்சுத்திறனும்  வழங்கப்பட வேண்டியது தான் அவசியமே தவிர, ஆங்கிலவழிக் கல்வி அவசியம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.