Asianet News TamilAsianet News Tamil

தவிக்கும் தமிழகம்... 5ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க கோரிக்கை..!

எவ்வளவு தான் வீட்டில் இருந்து தண்ணீர் கொடுத்து விட்டாலும், அது அவ்வளவு போதுமானதாக இருக்காது. ஆகையால் விடுமுறை விடலாம் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர். 

Request for leave till 5th Std
Author
Tamil Nadu, First Published Jun 17, 2019, 12:51 PM IST

சென்னை நகரில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க, சில தனியார் பள்ளிகளில் மாணவர்களையே வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 Request for leave till 5th Std

குடிநீருக்கு ஒரு பாட்டில், கழிப்பறைக்கு ஒரு பாட்டில் என இரண்டு பாட்டில்களைக் கொண்டு வர உத்தரவிட்டு உள்ளனர். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை மாநகராட்சி சார்பில் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நேற்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் வசதிக்காக பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மூலம் நிதி திரட்டப்படும். Request for leave till 5th Std

அதைக் கொண்டு தேவைப்படும் பள்ளிகள் தகவல் தெரிவித்தால், 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறியுள்ளார். தற்போது பள்ளிகளில் இருக்கும் தண்ணீர் நிலவரம், எதிர்காலத்தில் சந்திக்க உள்ள தண்ணீர் பிரச்னை ஆகியவை குறித்து, வரும் திங்கள் முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருவள்ளூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் விவசாய நிலங்களின் ஆழ்துளைக் குழாய்களில் இருந்து தற்போது தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. சில இடங்களில் கல் குவாரிகளில் இருக்கும் தண்ணீரும், சென்னை மக்களின் தாக்கத்தை தீர்த்து வருகிறது. இதற்கிடையில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சில பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் பரவத் தொடங்கின. 

ஆனால், இதை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகமும் கடும் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் வேளையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் விடுமுறை அளிக்க தமிழக அரசு சிந்திக்கக் கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இயற்கை உபாதைகளை கழிப்பதில் பெரும் சிரமம் உண்டு.Request for leave till 5th Std

இவர்கள் வகுப்பறை அல்லது பள்ளி வளாகத்தில் அவசர கதியில் இயற்கை உபாதைகளை கழிக்க நேரிடும். இவற்றை சுத்தம் செய்ய நிச்சயம் அதிக தண்ணீர் தேவைப்படும். அவர்களால் தாகத்தைக் கட்டுப்படுத்த இயலாது. அடிக்கடி குடிநீர் கேட்க நேரிடும். எவ்வளவு தான் வீட்டில் இருந்து தண்ணீர் கொடுத்து விட்டாலும், அது அவ்வளவு போதுமானதாக இருக்காது. ஆகையால் விடுமுறை விடலாம் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios