நேற்று இரவு ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் பால்காரில் இரண்டு இந்து துறவிகளும் அவர்களது டிரைவரும் கொல்லப்பட்டது தொடர்பாக ரிபப்லிக் தொலைக்காட்சியில் பேசும் போது அதன் ஆசிரியர்  அர்னாப் கோஸ்வாமி அவர்கள் காங்கிரஸ் தலைவர் இது குறித்து ஏன் கண்டனம் செய்யவில்லை. இந்து துறவிக்கு பதிலாக ஒரு பாதிரியாரோ அல்லது இந்து அல்லாத சிறுபான்மையினரோ இதுபோல் காட்டுமிராண்டித் தனமாக கொல்லப்பட்டிருந்தால் சும்மா இருந்திருப்பாரா. 80 சதவிகிதம் இந்துக்கள் உள்ள நாட்டில் இந்துவாக இருப்பது பாவமா? என்று நியாயமான கோவத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் நேற்று இரவு சுமார் 12.25 க்கு ஸ்டூடியோவிலிருந்து அவரது மனைவியுடன் வீட்டிற்கு வரும் போது இளைஞர் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர்களை அர்னாபுடைய பாதுகாப்பாளர் கேட்டபோது கட்சித் தலைமைதான் எங்களுக்கு அர்னாப்பை தாக்கக் கூறியதாக அவர்கள் கூறினார்கள் என்றார். இதற்கு பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதில், நேற்று இரவு ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி ஸ்டுடியோவிலிருந்து வீட்டிற்கு செல்லும் போது இளைஞர் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பால்கார் படுகொலைகள் கிறித்தவ மிஷனரிகள், இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் ஜிகாதிகள் சேர்ந்து காவல்துறை முன்னிலையில் நடந்தேறியுள்ளது. இதற்கான விலை காங்கிரஸ், பவார், சிவசேனா கூட்டணி கொடுத்தே தீரவேண்டும்.

இந்து விரோத ஊடகங்கள் மத்தியில் உண்மை பேசும் ஆண்மகன் அர்னாப். சோனியாவின் முகத்திரையை முழுவதும் கிழித்து தொங்கவிட்டுள்ளார். எனவே அர்னாப் போன்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.