கொரோனா நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது என திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்து இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரியவந்து இருக்கிறது.

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு முன்பு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நிதி மந்திரி அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இப்போது நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் நண்பர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. இந்த உண்மையை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு ரூ.6 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, ‘’தமிழ்நாடு சிறு-குறு தொழிலால் வளர்ந்த மாநிலம். தமிழகத்தின் பல நூறு நகரங்கள் இத்தொழிலால் வளர்ந்தன. இதை ஜிஎஸ்டி சீரழித்தது. இந்த வரியில் தமிழகத்தின் பங்கை இதுவரை கொடுக்காத மோடி அரசு, மார்வாடிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்கிறது. மார்வாடிகளுக்கு படியளக்கும் பாஜக

முஸ்லீம் மீது வெறுப்பை உமிழ்ந்து நம்மை திசை திருப்புகிறது பாஜக சங்கிக்கூட்டம். நம்மை முஸ்லீம்-இந்து என பிரித்துவிட்டு நம் வரிப்பணத்தை மார்வாடிக்கு படியளக்கிறது. மார்வாடிகளுக்கு படியளக்கும் பாஜக. தமிழ்நாட்டின் வரி நிலுவையை கொடுக்காத மோடி அரசு, கொரொனோ நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது. அனைத்து மக்களின் சேமிப்பு பணத்தை இவர்களுக்கு தாரை வார்க்கிறது’’என ஆதங்கப்பட்டுள்ளார்.