Asianet News TamilAsianet News Tamil

ஆ.ராசாவை கட்சியை விட்டு நீக்குங்கள்... ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜா வலியுறுத்தல்..!

தமிழக தேர்தல் களத்தில் பெரிய பூதாகரமாக வெடித்தது முதல்வரின் தாயார் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு. இதற்கு கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

Remove A.Rasa from the party ... H.Raja insists on Stalin
Author
Tamil Nadu, First Published Mar 29, 2021, 6:22 PM IST

தமிழக தேர்தல் களத்தில் பெரிய பூதாகரமாக வெடித்தது முதல்வரின் தாயார் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு. இதற்கு கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் கொந்தளித்த அதிமுகவினர் ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்தும் செருப்பால் அடித்தும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

Remove A.Rasa from the party ... H.Raja insists on Stalin

பிரச்சாரத்தில் முதல்வரும் ஆ.ராசாவை கடவுள் தண்டிப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார். இச்சூழலில் இன்று காலை ஆ.ராசா உளப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது ஆ.ராசாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுகவின் ஆ.ராசா முதல்வரை மட்டும் காயப்படுத்தவில்லை. பெண்ணினத்தையே காயப்படுத்தியுள்ளார். யாரை வேண்டுமென்றாலும் இழிவுப்படுத்தலாம் என்பது அவரது வழக்கம்.Remove A.Rasa from the party ... H.Raja insists on Stalin

அரசியல், கருத்தியல் ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள நாங்கள் தயராக இருக்கிறோம். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பதற்கு எந்த விஷயமும் திமுகவிடம் இல்லை. அதனால் தனிநபர் மீதான தாக்குதலில் இறங்கியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கதக்கது . சித்தாந்த ரீதியாக திக , திமுகவை கடுமையாக விமர்சிப்பவன் நான். தனிநபர் பற்றி விமர்சிப்பது இல்லை. அவரது விளக்கங்கள், மன்னிப்பு ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்மையை ஸ்டாலின் மதிப்பவராக இருந்தால் ஆ.ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios