வரலாறு காணாத மழை வெள்ளத்தால், கேரளம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது என  உள்ளதாக அம்மாநில  முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, வெறும் 600 கோடி ரூபாய் மட்டும் நிவாரணமாக வழங்கிவிட்டு, அமைதியாகி விட்டார்.ஆனால், மத்திய அரசு ரூ. 2 ஆயிரத்து 500 கோடி அளவிற்காவது, உடனடி உதவியாக வழங்க வேண்டும் என்று பினராயி விஜயன் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில் கேரள மக்களுக்கு  அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேரள அரசு, தங்களுக்கு 233 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அதனை அளிக்குமாறும் மோடி அரசு கூறியுள்ளது. இல்லையென்றால் இந்த பணம் வெள்ளம் நிவாரண நிதியில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றும் ஈரவிரக்கமின்றி கூறியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கை கேரள அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கேரள வெள்ளத்தையொட்டி, அவசர உதவியாக எரிபொருள், சிலிண்டர் ஆகியவைகளை வழங்கிய மோடி அரசு, பல்வேறு கிடங்குகளில் இருந்து 89 ஆயிரத்து 540 மெட்ரிக் டன் அரிசியையும் வழங்கியது.

இதற்குத்தான் தற்போது கேரளத்திடம் பணம் கேட்டுள்ளது.அதேபோல, கேரளத்தில் ராணுவத்தை இறக்கிவிட்டு, மீட்புப் பணியை மேற்கொண்டதற்கான சேவைக் கட்டணத்தையும் கேரள அரசிடம், மோடி அரசு வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே காஷ்மீர் வெள்ளத்தின்போது, அம்மாநிலத்திற்கு நிதி உதவியாக 1200 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. அப்போது, ராணுவ சேவைக் கட்டணமாக 500 கோடி ரூபாயை மத்திய அரசு எடுத்துக் கொண்டது.

அதுபோலவே தற்போது கேரளத்திற்கான நிவாரணத் தொகையிலும், அரிசி, எரிபொருள் கொடுத்தது, ராணுவம் மூலம் மீட்புப் பணிகளில் உதவியது ஆகியவற்றுக்கான பணத்தை மத்திய அரசு பிடித்துக் கொள்ளும் என்று தெரிகிறது