Reduction of land value to 33 Approval at Cabinet meeting
நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீடு 33 சதவீதமாக குறைப்பதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கபட்டுள்ளது.
சட்டசபை கூட்டம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், சட்டசபை கூட்டத்தொடரை வருகிற 14-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 19-ந்தேதி வரை 24 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் எனவும் தினமும் கேள்வி நேரம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சில மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. இதில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீடு 33 சதவீதமாக குறைப்பதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கபட்டுள்ளது.
மேலும், பத்திரபதிவு துறையில் ஓராண்டிற்கு 1,500 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
2015 -2016 ஆம் ஆண்டு 25.28 லட்சமாக இருந்த பத்திரபதிவு எண்ணிக்கை கடந்த ஆண்டு 20.27 லட்சமாக குறைந்தது. ஒரே ஆண்டில் பத்திரபதிவு எண்ணிக்கை 5 லட்சம் சரிந்ததையடுத்து வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2012 ல் நிலப்பதிவுக்கான வழிகாட்டு மதிப்பீடு அதிகரிக்கபட்டதால் பத்திரபதிவு குறைந்தது. இதையடுத்து நிலமதிப்பீட்டு தொகையை குறைக்க கோரி வணிகர்கள் கூறியிருந்தனர்.
பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நிலமதிப்பீட்டு தொகையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
