அலங்காநல்லூரில் போராடுபவர்களை புரட்சியாளர்களாக பார்க்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகம் கண்டிராத மாபெரும் எழுச்சி போராட்டமாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் அரசியல் கட்சிகள் தான் இப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தியுள்ளனர் , ஆனால் தன்னெழுச்சியாக அரசியல் கட்சிகளை புறந்தள்ளி நடக்கும் போராட்டத்தை பார்க்கிறோம்.

 கூடங்குளம் , முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு அடுத்து பெரிய எழுச்சியாக மக்கள் , மாணவர்கள் , இளைஞர்கள் , திரைக்கலைஞர்கள் தன்னெழுச்சியாக போராடுவது பாராட்டத்தக்கது.

உலக வளர்ச்சியில் உலகம் உள்ளங்கையில் உள்ளது. இதில் பலதையும் இளைஞர்கள் புரிந்துகொள்கின்றனர. இதை யாரும் தூண்டிவிட்டார்கள் என்று கூற முடியாது, இதை மக்கள் புரட்சியாக பார்க்கிறேன். இதை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. 

மாநில அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாநில அரசு முழு அழுத்தம் கொடுத்து அவசர சட்டம் கொண்டு வர தவறி விட்டது. மந்திரிமார்கள் எதையும் செய்ய வில்லை என்று மாணவர்கள் தானே போராட்டத்தில் குதித்து விட்டனர். இந்த போராட்டத்தில் ஈடு பட்ட ஒவ்வொருவரையும் புரட்சியாளராக பார்க்கிறேன்.