சினிமாவில் ரஜினிகாந்த் அண்ணாமலை என்றால், நிஜத்தில் நான்தான் அண்ணாமலை என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறியுள்ளார். 

ஆடிப்பெருக்கையொட்டி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் முதல் முறையாக வைகைப் பெருவிழா 2019 என்ற மாநாட்டை மதுரையில் நடத்தி வருகிறது. 12 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த விழாவில் இன்று பசு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாளும் துறவிகள் மாநாடு, பெண்கள் மாநாடு, வைஷ்ணவ மாநாடு, ஐயப்பப் பக்தர்கள் மாநாடு, பூசாரிகள் மாநாடு, சிவனடியார்கள் மாநாடு, பசு பாதுகாப்பு மாநாடு, முத்தமிழ் மாநாடு, இளைஞர்கள் மாநாடு, நதிநீர்ப் பாதுகாப்பு மாநாடு, விவசாயிகள் மாநாடு, சன்மார்க்கர்கள் மாநாடு, சித்தர்கள் மாநாடு ஆகியன நடைபெற்று வருகின்றன.

 

இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அவர் பேசியது பின்வருமாறு, மதுரையில் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதை ஒரு சிலருக்கு பிரச்சனையாக நினைக்கின்றனர். எச். ராஜா, சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படம்போலத்தான், நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சினிமாவில் ரஜினிகாந்த் அண்ணாமலை என்றால், நிஜத்தில் நான்தான் அண்ணாமலை என்று கூறினார். 

மேலும், பசுவின் உடலினுள் 13000 தெய்வங்கள் உள்ளன. எனவே பசுவும் மற்ற விலங்குகளும் ஒன்றல்ல. எனவே இந்த மாநாட்டை விமர்சிப்பதை தவிர்க்கவும் என தெரிவித்தார்.