Asianet News TamilAsianet News Tamil

அன்புமணி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு... தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வாய்ப்பு..!

கடலூர், திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச் சாவடியிலும் தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடக்க வாய்ப்பிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Re-polling in dharmapuri constituency? Election Commission to decide
Author
Tamil Nadu, First Published Apr 20, 2019, 1:06 PM IST

கடலூர், திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச் சாவடியிலும் தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடக்க வாய்ப்பிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.Re-polling in dharmapuri constituency? Election Commission to decide

சில இடங்களில் கள்ளஓட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ‘’கடலூர், திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச் சாவடியிலும் தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடக்க வாய்ப்பிருக்கிறது. அங்கு மறு வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும். மாவட்ட தேர்தல் அதிகாரி, பொதுப்பார்வையாளர்கள் தரும் அறிக்கையை பொறுத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். பொதுப்பார்வையாளர்கள் தரும் அறிக்கை இன்று மாலைக்குள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். Re-polling in dharmapuri constituency? Election Commission to decide

அரியலூர், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த அவசியம் இருக்காது. வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்னை நடக்கவில்லை.  ஊருக்குள் மட்டுமே கலவரம் நடந்துள்ளது. புகார் அளிக்கப்பட்டால் உரிய ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.Re-polling in dharmapuri constituency? Election Commission to decide

தருமபுரியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த பாமக அன்புமணி போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக செந்தில் குமார் களமிறங்கினார். இந்நிலையில் நத்தமேடு வாக்குச் சாவடியில் கள்ளஓட்டு பதிவு செய்யப்பட்டதாக புகார் கிளம்பியது. கடலூரில் பாமக  வேட்பாளர் கோவிந்தசாமியும், திமுக வேட்பாளராக ஸ்ரீ ரமேஷும் களமிறங்கினர். திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜெயக்குமாரும், அதிமுக வேட்பாளராக வேணுகோபாலும் களமிறங்கினர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios