தேர்தல் கமிஷனில் கடந்த மார்ச் மாதம், ஆர்.பி. உதயகுமார் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர் சசிகலாதான் என்றும், துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இன்று காலை, செய்தியாளர்களிடையே பேசும்போது, கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கவே டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

டிடிவி தினகரனின் நிர்வாகிகள் அறிவிப்பு கேலிக்குரியது என்றும், அவரின் கேலிக்கூத்தால், எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பை நிராகரித்ததாகவும் கூறியிருந்தார். 

அதேபோல் தகுதியானவர்களுக்கு பதவி அளித்தது ஏற்படையதுதான், ஆனால் நியமன முறை சரியில்லை என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆர்.பி. உதயகுமார், தேர்தல் கமிஷனில் கடந்த மார்ச் மாதம் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அது தொடர்பான சில விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

ஆர்.பி. உதயகுமார், தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர் சசிகலா என்றும், துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் என்றும் கூறியிருந்தார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.