5 முறை ஆட்சியில் இருந்த திமுக... சமூக நீதிக்காக ஆற்றிய பங்களிப்பு என்ன.? விவாதிக்க தயாரா.? ஆர் பி உதயகுமார்
திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை சுக்கு நூறாக உடைத்து, சபாநாயகர் தனபாலின் சட்டையை பிடித்து கிழித்து, அவரை காயப்படுத்தி அவமானப்படுத்தினர் இது சட்டசபை நிகழ்வாகும். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் சமூக நீதி குறித்து பதில் கூற முன் வருவாரா? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் திசை திருப்பும் பேச்சு
சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவில் சமூக நீதி இல்லையென அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், சமூக நீதிப் பற்றி ஒவ்வொரு நாளும் அக்கரையோடு திமுக பேசி வருவது திசை திருப்பும் வகையில் பேச்சு உள்ளது.
சமூக நீதியை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் வழிகாட்டும் வகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டினை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுத்த புரட்சித்தலைவி அம்மா, அதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 9 வது அட்டவணையில் இடம்பெறச் செய்து இதன் மூலம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றிகரமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
சபாநாயகர் பதவி வழங்கிய ஜெயலலிதா
அதனால் தான் தமிழக மக்கள் சமூக நீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினர். அதேபோல் சமூக நீதியில் புரட்சி செய்தார் ப.தனபாலை சட்டமன்ற பேரவை தலைவராக அமர்த்தினார். இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மா உட்பட அனைவரும் அவர் வரும்பொழுது எழுந்து வணங்கினார். இதன் மூலம் அவர் சார்ந்த சமுதாயத்தில் தலைமுறை தலைமுறையாக பெருமை கிடைக்கும் வகையில் இருக்கையை தந்தார்.
ஆனால் திராவிட முன்னேற்ற கழக சார்ந்தவர்கள் அந்த இருக்கையை சுக்கு நூறாக உடைத்து, அவரை சட்டையை பிடித்து கிழித்து, அவரை காயப்படுத்தி அவமானப்படுத்தினர் இது சட்டசபை நிகழ்வாகும். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் சமூக நீதி குறித்து பதில் கூற முன் வருவாரா? எடப்பாடியார் இது கொடுத்து அறிக்கைவெளியிட்டாரே?
அதிமுக செய்த சாதனை என்ன.?
இதுகுறித்து விளக்கம் தருவதற்கு முதலமைச்சரோ ,விளையாட்டு துறை அமைச்சரோ முன் வருவார்களா? சமீபகாலமாக சமூக நீதி குறித்து மிக அக்கரையோடு பேசியிருக்கிற விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்களே? திருச்சி தொகுதியில் தலித் ஏழுமலையை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து, மத்திய அமைச்சராகவும் புரட்சித்தலைவி அம்மா ஆக்கினார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல், அதிகாரம் பெற்று தருவதற்காக தனித் தொகுதி மட்டுமல்லாமல் பொது தொகுதிகளிலும் நிற்க வைத்து அவர்களை வெற்றி பெற வைத்தார்கள். தன்சிங் என்பவரை பல்லாவரம் பொதுதொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார்கள். வாணியம்பாடியில் வடிவேல் என்பவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
விவாதிக்க தயாரா.?
சமூக நீதிப் புரட்சியை செய்தார்கள் .ஜாதி வேறுபாடு இல்லாமல், மத வேறுபாடு இல்லாமல் புரட்சிதலைவி அம்மா முன்மாதிரியாக உருவாக்கி கொடுத்து கொடுத்துள்ளார். அந்த வழியில் 7.5 சகவீத இட ஒதுக்கீடு கொடுத்து இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் சமூக நீதியை தமிழகத்தில் உருவாக்கி தந்தவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார். இவையெல்லாம் மறைத்து விட்டீர்கள். திமுக சேர்ந்தவர்களை பார்த்து கேட்கிறேன் சமூக நீதியை பற்றி பல ஆண்டுகளாக பேசுகிறீர்கள். ஐந்து முறை ஆட்சி செய்துள்ளீர்கள் சமூக நீதிக்காக நீங்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதை மக்களிடத்தில் நீங்கள் விவாதிக்க தயாரா? என உதயகுமார் கேள்வி எழுப்புள்ளார்.