முதியோர் உதவி தொகை ரத்தா..? கொடுமையிலும் கொடுமை... கொடுத்ததை பறிக்கும் திமுக - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

முதியோர் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து வருவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். 

RB Udayakumar has demanded that the Tamil Nadu government should stop canceling the old age allowance

முதியோர் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1962ல் முதியோர் ஓய்வூதியத் தொகை 20 ரூபாய் இருந்து தொடங்கப்பட்டது , அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா 2011 ஆம் ஆண்டில் 500 ரூபாய் இருந்த முதியோர் ஓய்வூதிய  தொகையை1000 ரூபாயாக உயர்த்தி, தகுதியான நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தி ஆயுள் முழுவதும் வழங்குவேன் என்று கூறினார்,  2010 திமுக ஆட்சியின் போது 11 லட்ச நபர்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஓய்வூதியம் 2011 தேர்தலையொட்டி 14 லட்சம் பேராக உயர்த்தினார்கள் இதற்கான திமுக ஆட்சியை ஒதுக்கப்பட்ட தொகை 1200கோடி ஆகும், மேலும் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், முதியோர் ஓய்வுதிய திட்டத்திற்கு அதிகமான மனுக்கள் வந்தது,அதனைத் தொடர்ந்து கூடுதலாக 5 லட்சம் பேருக்கு வழங்க அரசாணை வெளியிட்டார், அதனை தொடர்ந்து கடந்த அம்மா ஆட்சியில் 35 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வு திட்டம் வழங்கப்பட்டது இதற்காக 4,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது,

3 மாத புலிக்குட்டி வேணுமா.. அப்படினா 25 லட்சம் கொடுங்க.. ஸ்டேட்டஸ் வைத்து தனக்கு தானே ஆப்பு வைத்த இளைஞர்

RB Udayakumar has demanded that the Tamil Nadu government should stop canceling the old age allowance

தற்போது சம்பந்தமில்லாத காரணங்களை கூறி ஏற்கனவே வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை ரத்து செய்யப்பட்டு வருகிறது இது மிகவும் அபாயகரமானதாக உள்ளது, குறிப்பாக கடந்த அம்மா ஆட்சியில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் இப்படி 9 பிரிவினருக்கு வழங்கப்பட்டது இந்த தொகை வைத்து மருத்துவ சிகிச்சைக்கும், தன்னம்பிக்கையுடன், தன்மானத்துடன் வாழ்ந்தார்கள், கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக வழங்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தனர், ஆனால் கொடுமையிலும் கொடுமை தற்போது கொடுத்ததை பறிப்பதாகும் இது முதலமைச்சர் கவனத்திற்கு சென்றதா என்று மக்கள் கேட்கின்றனர், குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20,000 முதல் 50,000 வரை ரத்து செய்யப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் வருகிறது இது அரசின் கவனத்திற்கு சென்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது, 

துணை மேயருக்கு இரண்டாம் வரிசை...மேயருக்கு 3 ஆம் வரிசையா..? அரசு நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்படுகிறாரா பிரியா..

RB Udayakumar has demanded that the Tamil Nadu government should stop canceling the old age allowance

ஆகவே அரசின் புதிய விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அரசு ஆதரிக்கிறதா என்பது தெரியவில்லை, ஆகவே கடந்த பத்தாண்டு காலத்தில் எடப்பாடியார் ஆட்சியில் எப்படி வழங்கப்பட்டதோ, அதேபோல்  தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  இது குறித்து  கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையில்  நான் கவனத்திற்கு கொண்டு வந்த போது, அமைச்சரும் சரிசெய்யப்படும் என்று அறிவித்தார் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே முதலமைச்சர் போர்க்கால அடிப்படை மேற்கொண்டு சாமானிய மக்களை காப்பாற்றுவாரா இல்லை, காப்பாற்றாமல் கைவிடுவாரா என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்

இதையும் படிக்கவும்

50ஆயிரம் தொண்டர்களின் உற்சாகத்தில் ராகுல் காந்தி...! 2நாள் இந்தியா ஒற்றுமை பயணத்தில் பொதுமக்களுடன் சந்திப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios