தேர்தல் முடிவு வரும் முன்பே எம்.பி பதவியுடன் கோயில் கல்வெட்டில் இடம்பெற்றிருந்த ஓ.பி,.எஸ் மகனின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில், சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்திலேயே காசி ஶ்ரீ அன்னபூரணி கோயிலும் உள்ளது. நேற்று இந்தகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலுக்கு உதவி புரிந்தவர்களின் பெயர்களில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் ஓ.பி.ஜெயபிரதீப் குமார், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தால் பிரச்னை இல்லை.

 

ரவீந்திரநாத் பெயருக்கு முன்னால் இருந்த தேனி மக்களவை உறுப்பினர் பதவி எனப் பொறிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. அதற்குள் தேனி எம்பி ரவீந்திரநாத் என கோயில் நிர்வாகம் பெயர் பொறிக்க எப்படி அனுமதித்தது என கேள்வி எழுந்து பரபரப்பை கிளப்பியது. 

இந்நிலையில் அந்த பெயர் தாங்கிய கல்வெட்டின் மீது மற்றொரு கல்வெட்டை பொறுத்தி ரவீந்திரநாத் பெயரை மறைத்துள்ளனர். கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஒரே நாளுக்குள் மகன் பெயர் தாங்கிய கல்வெட்டை அழித்துள்ளது தெய்வ குற்றமாகிவிடுமோ என ஓ.பிஎஸை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.