Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டுக்கு துக்க நாள்... மத்திய அரசை கடுமையாக சாடிய ரவிகுமார் எம்.பி..!

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி., ரவிக்குமார், “தமிழ்நாட்டுக்கு இன்று துக்கநாள்” என்று கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ravikumar MP criticizes the central government
Author
Tamil Nadu, First Published Jul 29, 2019, 5:14 PM IST

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக, முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளன. விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி., ரவிக்குமார், “தமிழ்நாட்டுக்கு இன்று துக்கநாள்” என்று கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ravikumar MP criticizes the central government

ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டுக்கு துக்கநாள்: இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அணை பாதுகாப்பு மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்குமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் கோருகிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக அவர் “இன்று நாடாளுமன்றத்தில் அணை பாதுகாப்பு மசோதா 2019-ஐ அறிமுகம் செய்தது மத்திய அரசு. இந்த மசோதாவின் மூலம் ஒரு மாநிலத்துக்கு மற்ற மாநிலங்களில் இருக்கும் அணைகளின் உரிமை பறிக்கப்படும். மாநிலங்களுக்குக் கீழ் இருக்கும் அணைகளுக்கான அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல்.Ravikumar MP criticizes the central government

அனைத்து மாநிலங்களுக்கும் இது எதிரானது என்றாலும், தமிழகத்துக்கு இந்த மசோதா கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். காரணம், நமது 4 அணைகள் கேரளாவில் இருக்கின்றன. இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் அந்த அணைகள் மீது நமக்கிருக்கும் உரிமை பறிக்கப்படும். இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த மசோதாவுக்கு எதிராக ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில எம்.பி-க்களும் குரல் கொடுத்துள்ளனர். இதில் மிகப் பெரிய விந்தை, மத்திய அரசுக்கு இப்படியொரு சட்டம் இயற்ற உரிமையே கிடையாது என்பதுதான். அரசியல் காரணங்களைத் தாண்டி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டிய மசோதா இது. ஆரம்ப நிலையிலேயே மத்திய அரசின், இந்த மசோதாவை தடுத்து நிறுத்திட வேண்டும்” என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios