Asianet News TamilAsianet News Tamil

ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் இதெல்லாம் இனி உங்க வீட்டுகே வரும்… புதிய திட்டம் இன்று அறிமுகம்…

குடிநீர் இணைப்பு, சாதிச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உட்பட வீடு தேடி வரும்  அத்தியாவசிய  சேவைகள் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைக்கிறார்.

Ration cand and othercertificate will come to your house
Author
Delhi, First Published Sep 10, 2018, 8:50 AM IST

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் வகையில் டெல்லியில் வீடுதேடி சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்தார். அதற்கான ஒப்புதல் அண்மையில் அளிக்கப்பட்டது.

Ration cand and othercertificate will come to your house

இந்நிலையில், டெல்லி மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப் பதிவு, ஓட்டுனர் உரிமைக்கான விண்ணப்பம் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டத்தை  இன்று முதல்மைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.

Ration cand and othercertificate will come to your house

டெல்லியில் உள்ள அரசு தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துணை அமைச்சர்  மணிஷ் சிசோடியா உள்ளிட்ட அமைச்சர் பங்கேற்கின்றனர்.

இந்த திட்டத்தின்கீழ் டெல்லி அரசுக்கு உட்பட்ட வருவாய்  துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து  துறை, குடிநீர் வாரியம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை, தொழிலாளர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை தொடர்புடைய 40 சேவைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Ration cand and othercertificate will come to your house

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் வெளியிட்ட பதிவில், ‘ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் உலகிலேயே முதன்முறையாக வீடுதேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு மிகவும் வசதியான திட்டம் இன்று தொடங்குகிறது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடு தேடி வரும் அத்தியாவசி சேவைகள் திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios