முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா.முத்து (90) ராசிபுரத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களாகவே திமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது கழகத்தினரை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமீபத்தில் திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி, குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காத்தவராயன் மற்றும் மறைந்த கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் திமுக பொதுச்செயலாளரும் க.அன்பழகன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், திமுகவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இவர்களின் மரணத்தில் இருந்து திமுகவினர் மீள்வதற்குள் அடுத்த மரண செய்தி வந்துள்ளது. முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா முத்து (90) உடல்நலக்குறைவால் ராசிபுரத்தில் காலமானார். 1968 முதல் 1974 சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேராசிரியர் அன்பழகனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.