பிரான்ஸ் நாட்டில் இருந்து போர் விமானம் ரபேல் 36 வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்திருக்கிறது. ரபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதற்கான ஆவணங்களை ராகுல்காந்தி ஏற்கனவே வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார். இந்தநிலையில் அந்த சர்ச்சை மீண்டும் கிளம்பியிருக்கிறது.

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசையும் சாடியுள்ளார். 

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் ராகுலகாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரஃபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்?
126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்?இந்துஸ்தான் ஏரோனெட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக திவாலாகிப்போன அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க முடியுமா?