புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆனால், கடந்த சட்டப்பேரவை தேர்தலை கூட்டி கழித்து பார்த்தால் பாமகவின் ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சுகுமாரன் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆனால், கடந்த சட்டப்பேரவை தேர்தலை கூட்டி கழித்து பார்த்தால் பாமகவின் ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சுகுமாரன் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை, வாலாஜா, மேல்விஷாரம், ஆகிய மூன்று நகரசபைகளும், வாலாஜா ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளும் அடங்கியுள்ளது. மேலும் அம்மூர் பேரூராட்சியும் இதில் அடங்கியுள்ளது. ராணிப்பேட்டை நகரம் 30 வார்டுகளும், வாலாஜா நகரம் 24 வார்டுகளும், அம்மூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும் உள்ளன. இந்த தொகுதியில் தற்போது 2,65,626 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,28 ,391 பேரும், பெண் வாக்காளர்கள் 1,37,219 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 16 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாக ராணிப்பேட்டை தொகுதி விளங்குகிறது. 

இந்த தொகுதியில் 1952-ல் இருந்து காங்கிரஸ் 3 முறையும், திமுக 6 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் ஒன்றிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காட்பாடி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான துரைமுருகன் ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது ராணிப்பேட்டை தொகுதி திமுக வசம் உள்ளது. இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஆர்.காந்தி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் திமுக செயலாளராக பதவி வகிக்கின்றார். மேலும் இவர் ராணிப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 3 முறை இருந்துள்ளார்.

இத்தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர் ஆகிய மக்கள் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள், யாதவர், நாயுடு, சௌராஷ்ட்ரா, கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய தொகுதியாக ராணிப்பேட்டை தொகுதி உள்ளது.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பாமக ஆதரவுடன் அதிமுக சார்பில் எஸ்.எம். சுகுமாரன் போட்டியிடுகிறார். அதிமுக திமுகவினருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும் கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் போது அதிமுகவின் கையே ஒங்குவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராணிப்பேட்டையில் வன்னியர் நிறைந்துள்ளதால் மொத்த ஓட்டையும் பாமகவின் ஆதரவுடன் அதிமுகவினர் அறுவடை செய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் காந்தி, அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை அவர்களை 7,896 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது, தனித்து நின்ற பாமக 23,850 மற்றும் பாஜக 1,342 வாக்குகள் வெற்றனர். இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாமக + அதிமுக ஓட்டு வங்கிகையும் கணக்கீடும் போது ராணிப்போட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சுகுமாரன் முந்துவதாகவே கூறப்படுகிறது.