Ramnath Govinth abd meerakumar wil come to chennai

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர், ராம்நாத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்ஐம், மீரா குமார் திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆதரவு கோருகின்றனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்த புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17-ந்தேதிநடைபெறவுள்ளது..

இத்தேர்தலில் பாஜக சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் காக்கு சேகரிக்க இன்று சென்னை வருகின்றனர்.



ராம்நாத் கோவிந்த், இன்று காலை 11 மணிக்கு சென்னை வருகிறார். கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு வரும் ராம்நாத் கோவிந்த் மாலை 3 மணிக்கு புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ராம்நாத் கோவிந்த் ஆதரவு திரட்டுகிறார்.

மாலை 4 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்திற்கு வரும் ராம்நாத் கோவிந்த், ஓபிஎஸ் ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கு சேகரிக்கிறார்



மாலை 5 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு வரும் ராம்நாத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் அவர் ஆதரவு திரட்டுகிறார்..

இதேபோல், எதிர்கட்சிகளின் வேட்பாளரான மீராகுமார் இன்று மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து, லீலா பேலஸ் ஓட்டலுக்கு வரும் மீராகுமார் மாலை 6 மணிக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அவர் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மேலும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் அங்கேயே மீராகுமார் சந்தித்து ஓட்டு வேட்டை நடத்துகிறார்.



இரவு 8 மணிக்கு கோபாலபுரத்திற்கு வரும் மீராகுமார், தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். அங்கிருந்து விமான நிலையம் செல்லும் அவர் இரவே டெல்லி திரும்புகிறார்.