அதிமுக ஆட்சியில்தான் அனைத்து சமூக மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

தமிழக முன்னாள் அமைச்சரான ராமசாமி படையாட்சியாருக்கு 2 கோடிய 15 லட்சம் ரூபாய் செலவில் 1.7 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் ராமசாமி படையாச்சியாரின் வெண்கல திருவுருவசிலை மற்றும் நூலகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதல்வர்;- தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் துணிச்சலாக இருந்தவர் ராமசாமி படையாட்சியார், மக்களை மனிதநேயத்துடன் அணுகியவர் ராமசாமி படையாட்சியார், வாழும் போது வரலாறாக வாழ்ந்தவர் ராமசாமி படையாட்சியார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் ராமசாமி படையாட்சியார். கடலூரில் இருப்புப் பாதை மற்றும் மருத்துவமனை அமைக்க தமது நிலத்தை வழங்கியவர் ராமசாமி படையாட்சியார் என்றும் முதல்வர் புகழாரம் சூட்டினார். 

வாக்குறுதி அளித்து அதை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி அதிமுக ஆட்சி, ஜெயலலிதா வழியில் சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என கூறினார்.