பல்வேறு போட்டிகளுக்கு இடையே தமிழக பாஜகவின் தலைவராக து.குப்புசாமி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. எனினும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 

அதன்பின்னர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது. இதில், எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டன. சீனியர்கள் என்ற முறையில் பொன்னார் மற்றும் எச்.ராஜாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இளைஞர் என்ற முறையில் தேசிய இளைஞரணி தலைவர் ஏ.பி முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.  

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்று சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், டெல்லி பிரதிநிதிகள் நரசிம்மராவ், சிவப்பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் து.குப்புராமுவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அவரை தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு பாஜக துணைத் தலைவராக பதவி வகித்தவர். 1986 முதல் 2006 வரை பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவராக 3 முறை பதவி து.குப்புசாமி பதவி வகித்தவர். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.