Asianet News TamilAsianet News Tamil

'அவங்க வயித்துல சாராயம் தான் பொங்கியிருக்கு'..! வேதனையில் கொந்தளிக்கும் மருத்துவர் ராமதாஸ்..!

பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும்.ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது.

Ramadoss tweet about Tasmac pongal sales
Author
Trichy, First Published Jan 21, 2020, 12:51 PM IST

தமிழகத்தில் இருக்கும் அரசு மதுபான கடைகளில் சாதாரண நாட்களில் 80 முதல் 90 கோடி வரை வசூலாகும். தீபாவளி,பொங்கல், வருடப்பிறப்பு, தொடர் விடுமுறை தினங்களில் மது விற்பனை தாறுமாறாக அதிகரிக்கும். அதன்படி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த வாரம் முழுவதும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடிமகன்களும் வழக்கம் போல பொங்கல் பண்டிகையை மது அருந்தி உற்சாகமாக கொண்டாடி இருக்கின்றனர். 

Ramadoss tweet about Tasmac pongal sales

இந்த வருட பொங்கல் பண்டிகையின் 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மூலம் 606 கோடியே 72 லட்சம் ரூபாய் வருவாயாக தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. இது கடந்த வருடத்தை விட 10 சதவீதம் அதிகமாகும். அதிகபட்சமாக திருச்சியில் 143 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் 315 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இந்தநிலையில் இவ்வளவு கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது என்கிற செய்தி கேட்டு தனது வயிறு வேதனையில் எரிவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், 'இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில்  ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்?' பதிவிட்டுள்ளார்.

 

மேலும், 'தமிழ்நாட்டில்  பொங்கல் விழாவின் 3 நாட்களில்  ரூ. 605 கோடிக்கு மது விற்பனை: செய்தி - கரும்பு விற்பனையாகவில்லை... இஞ்சி, மஞ்சள் கொத்துகளை வாங்க ஆள் இல்லை. மதுக்கடைகளில் மட்டும் மாநாட்டுக் கூட்டம். தமிழன் என்றொரு இனமுண்டு... தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பார்களே.... அது இது தானோ? தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி ரூ.605 கோடிக்கு மது விற்பனை. வரலாற்று சாதனையாம். ஆஹா.... இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் குடிப்பதில் சாதனைகளை மட்டும் தான் படைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்களாம். அடக் கொடுமையே?' என்று தெரிவித்திருக்கிறார்.

Ramadoss tweet about Tasmac pongal sales

தொடர்ந்து, 'பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும்.ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது. முதல் பொங்கல்வயிற்றை நிறைக்கும்.இரண்டாவது பொங்கல் வயிற்றை அரிக்கும். தமிழா நீ மதுவை கைவிட்டு தலைநிமிர்வது எந்நாளோ?' என மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: நிறைமாத கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதிய கார்..! தூக்கி வீசப்பட்டு மகனுடன் பலி..!

Follow Us:
Download App:
  • android
  • ios