நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமைத்துள்ள கூட்டணியில்  பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தேமுதிகவை எப்படியாவது இணைத்துவிட வேண்டும் என்று பாஜக பெரு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் தேமுதிக,  பாமகவுக்கு இணையாக தங்களுக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என முரண்டு பிடித்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி பேசிக் கொண்டே திமுகவுடனும் பேசி வந்நதால் அதிர்சசி அடைந்த அதிமுக பெரும் வருத்தத்தில் உள்ளனர், பாஜகவின் நிர்பந்தம் காரணமாகவே தொடர்ந்து தேமுதிகவுடன் பேசி வருகிறார்கள்.

தேமுதிக 7 சீட் வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், நாலு சீட் கொடுக்கிற அளவுக்கு கூட தேமுதிகவுக்கு செல்வாக்கு இல்லை என கூறிவருகிறது பாமக. கடந்த நான்கு நாளைக்கு முன்பு தேமுதிக செல்வாக்கு பற்றி பாமக தரப்பில் இருந்து ஒரு சர்வே எடுக்கப்பட்டதாம்.

அதில் தேமுதிகவுக்கு 2 சதவீதம் வாக்கு கூட இல்லைனு தெளிவாக இருக்கு. அவங்க எடுத்த சர்வே அப்படிதான் இருக்கும்னு நாம சந்தேகப்பட்டா கூட, , அதிகபட்சமாக போனாலும் 3 சதவீதத்தை தாண்டாது. அப்படி இருக்கும் போது அவங்களை இனி நாம தாங்கிப்பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பாமகவுக்கு கொடுத்த சீட்டு அப்படியே ஜெயிக்கணும்னா தேமுதிக நம்ம கூட்டணியில் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. தேமுதிக இங்கே வந்தால் எங்களுக்கு கொடுக்கிற சீட்டும் ஜெயிக்க முடியாது. அவங்களுக்கு கொடுக்கும் சீட்டும் ஜெயிக்க முடியாது. மொத்தமாக நம்ம கூட்டணிக்குதான் அது நஷ்டம் என ராமதாஸ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதனால் தேமுதிகவை கழற்றிவிடுவது தான் நல்லது  என ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரின் இந்த கோரிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி வீரிமாக யோசிக்கத் தொடங்கி விட்டார் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.