திடீரென கேப்டனை சந்தித்த ராமதாஸ்! கோகுல இந்திரா விற்காக நடந்த சந்திப்பின் பரபர பின்னணி!
தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னேற்ற சந்தித்ததன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா இருப்பதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னேற்ற சந்தித்ததன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா இருப்பதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக விற்கு 7 தொகுதிகளில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து அதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் சில பேச்சுவார்த்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தான் எளிமையாக்கியதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று திடீரென விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தது பல தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கி பாதிப்பிற்கு விஜயகாந்த் முக்கிய காரணம் என்று ராமதாசுக்கு எப்போதுமே ஒரு கோபம் உண்டு. அதனால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிக வேட்பாளர்களுக்காக ராமதாஸ் பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் பாமக வலுவாக உள்ள பல்வேறு தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழக்கும் சூழல் கூட ஏற்பட்டது.
இதனால் பாமக தேமுதிக இடையிலான மோதல் மற்றும் கருத்து வேறுபாடு தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் ராமதாஸ் விஜயகாந்தை வீடு தேடி சென்று சந்தித்தது அந்த மனவருத்தத்தையும் கருத்து வேறுபாட்டையும் நீக்குவதற்கு தான் என்று சொல்லப்பட்டது. உண்மையில் ராமதாஸ் அங்கு சென்றது விஜயகாந்தை ஐஸ் வைப்பதற்காகத்தான் என்றாலும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விற்கவும் விஜயகாந்தை சந்தித்து ராமதாஸ் பேசியதாக சொல்கிறார்கள்.
அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மத்திய சென்னையை பாமக விற்கு ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. வடசென்னை தொகுதி தேமுதிகவிற்கு அதிமுக கூட்டணியில் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில் கோகுல இந்திரா மத்திய சென்னையில் அதிமுக வேட்பாளராக களமிறங்க விரும்புகிறார். இதற்காக ராமதாசை சந்தித்த மத்திய சென்னை தொகுதி அதிமுக விட்டுக் கொடுக்கும்படி கோகுல இந்திரா கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் ராமதாஸ் உறுதியாக உள்ளார். அதிலும் மத்திய சென்னை தொகுதி தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று பாமக நிர்வாகிகள் கூறினார் இதன் காரணமாகவே மத்திய சென்னையை மிகவும் விரும்பி ராமதாஸ் வாங்கினார்.
ஆனால் பாமக அதிமுக கூட்டணிக்கு தொடர்ச்சியாக உதவிகள் செய்த கோகுல இந்திரா மத்திய சென்னையில் போட்டியிட விரும்புவதால் அந்த தொகுதியை அதிமுகவிற்கு விட்டுக்கொடுக்க ராமதாஸ் முன்வந்துள்ளார். அதே சமயம் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதிலும் ராமதாஸ் உறுதியாக உள்ளார். எனது வடசென்னை தொகுதியை தங்களுக்கு ஒதுக்கும்படி அவர் அதிமுகவிடம் கேட்டதாகவும் அதற்கு அதுகுறித்து விஜயகாந்திடம் பேசினால் தான் சரியாக வரும் என்று அமைச்சர்கள் தங்கமணியும் மேலும் அணியும் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி கோகுல இந்திரா சகிதமாக ராமதாஸும் அன்புமணியும் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மத்திய சென்னையை கோகுல இந்திரா விற்கு தாங்கள் பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் எனவே வடசென்னையை தங்களுக்கு விட்டுக்கொடுத்தால் தேமுதிக உள்ள விழுப்புரம் தொகுதியை தாங்கள் கொடுக்கத் தயார் என்று ராமதாஸ் விஜயகாந்திடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. வட சென்னையை காட்டிலும் விழுப்புரம் தொகுதி தேமுதிகவிற்கு மிகவும் சாதகமான ஒரு தொகுதி.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் லேயே மிகவும் பலம் வாய்ந்தவர் மற்றும் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் எல்.வெங்கடேசன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே விழுப்புரத்திற்குகாக வடசென்னையை விட்டுக்கொடுக்க தேமுதிக தயாராக இருந்தாலும் சென்னையில் தங்களுக்கும் ஒரு தொகுதி வேண்டும் என்று தேமுதிக அதிமுகவிடம் கூறி வருகிறது. இதனால்தான் நேற்று விஜயகாந்த் வீட்டில் ஒரே நேரத்தில் ராமதாஸ் அன்புமணி தங்கமணி வேலுமணி அன்புமணி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.