Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதிய பிரச்சனை - அரசின் முறைகேட்டை அமபலப்படுத்துகிறார் ராமதாஸ்

ramadoss statement-c3a62r
Author
First Published Jan 7, 2017, 5:41 PM IST


இது குறித்த அவரது அறிக்கை : 
தமிழ்நாடு அரசின் நிதிநிலை எந்த திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இரு சிறந்த உதாரணங்கள் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும், அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ஊதியமும் வழங்கப்படாமல் இருப்பது .
 தமிழ்நாடு அரசுத் துறைகளில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் பெருகி விட்டது தான் இந்த அவலநிலைக்கு காரணமாகும். அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு திசம்பர் மாத ஊதியம் ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. 
இதைக் கண்டித்து போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 
போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களிடமிருந்து அவர்களது ஊதியத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் செலுத்தப்படும். அதேபோல், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் பங்காகவும் 12% அறக்கட்டளையில் செலுத்தப்படும்.

ramadoss statement-c3a62r
 தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது அவர்கள் செலுத்திய தொகை ஓய்வூதியப் பயனாக வழங்கப்படும். நிர்வாகத்தின் சார்பில் செலுத்தப்பட்ட தொகையிலிருந்து மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இது தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் முறையாகும்.
இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டிருந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும், ஓய்வூதியப் பயன்களும் தடையின்றி தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். 
ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன. அன்றாடச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத நிலையில், தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் செலுத்தாமல், தங்களின் சொந்த செலவுகளுக்கு போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்திக் கொண்டன. 
இந்த வகையில் மட்டும் ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு போக்குவரத்துக் கழகங்கள் ரூ.4000 கோடி பாக்கி வைத்துள்ளன. தங்களிடமிருந்த பணம் தவிர, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் உள்ளிட்ட பிற நிறுவனங்களிடம் கடன் வாங்கியும் ஓய்வூதியம் வழங்கிய அறக்கட்டளை நிலைமை கைமீறிப் போனதால் கடந்த மாத ஓய்வூதியத்தை வழங்க மறுத்து விட்டது.
இதே காரணத்தினால் தான் 2012 ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவை உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios