ramadoss says that pmk wont be participate in strike

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற நாளை மறுநாள் அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பாமகவும், பாட்டாளி தொழிற்சங்கமும் பங்கேற்காது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிகைகையில் பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதைக் கண்டித்து தமிழ் நாட்டில் நாளை மறுநாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தள்ளார்.

காவிரிப் பிரச்சினைக்கு காரணமே திமுக தான் ராமதாஸ்,திமுகவுக்கு விவநாயிகளின் நலனுக்காக போராடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருவேளை கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடுவதற்காக திமுக போராட முன்வந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக திமுக தேர்ந்தெடுத்துள்ள போராட்ட வடிவம் பயனளிப்பதை விட பாதிப்பையே ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் பாமக ஆதரிக்கிறது. மாறாக பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசியல் அணி திரட்டும் முயற்சியே தவிர, விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்று பாமக உறுதியாக நம்புகிறது என தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த போராட்டத்தில் பாமக பங்கேற்காது என கூறியுள்ள ராமதாஸ் இத்தகைய போராட்டங்களைத் தவிர்த்து மக்களுக்கு பாதிப்பற்ற வகையிலான போராட்ட வடிவத்தை கையில் எடுக்கும்படி அனைத்து கட்சிகளையும் பாமக நட்புடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.