400 இடங்களில் பாஜக வெல்லும்... தமிழகத்தில் 10 இடங்களை பாமக கைப்பற்றும்- தேர்தல் பிரச்சாரத்தில் ராமதாஸ்

உங்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும், அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். குடிசை இல்லாத வீடாக மாற்ற வேண்டும். படித்தவர்களுக்கு வேலை உறுதி செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். 
 

Ramadoss said that PMK will win all 10 constituencies in Tamil Nadu KAK

ராமதாஸ் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்துலுக்கு இன்னும் 25 நாட்களுக்கும் குறைவான காலங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை அரசியில் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை கோவடி கிராமத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கினார். அப்போது பாமக வேட்பாளர் முரளி சங்கர் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 10 தொகுதி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தனது பிரச்சாரத்தை, முதன் முதலாக கிராமத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அதன் காரணமாகத்தான் தாய் கிராமமான கோவடி கிராமத்தில் தொடங்குகிறேன்.  என்னுடைய முதலாவது பரப்புரையை எளிமையான முறையில் தற்போது தொடங்கி இருக்கிறேன்.

Ramadoss said that PMK will win all 10 constituencies in Tamil Nadu KAK

பாமக 10 தொகுதிகளிலும் வெற்றி

நேரு மூன்று முறை பிரதமராக இருந்தார், அவருடைய மகள் இந்திரா காந்தி மூன்று முறை பிரதமராக இருந்தார்,  இப்பொழுது நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை பிரதமராக இருந்தார்.  மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார், தேசிய ஜனநாயக கூட்டணி இந்திய அளவில் 400 இடங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவோம் அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் 10 வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் மற்றும் கூட்டணி சேர்ந்த அனைவரும் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.  

உங்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும், அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். குடிசை இல்லாத வீடாக மாற்ற வேண்டும். படித்தவர்களுக்கு வேலை உறுதி செய்யப்பட வேண்டும்.  

ஆடம்பர மேடை அமைத்து பிரச்சாரம் செய்யவில்லை

அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்கள் எல்லாம் கண்கள் தாயில்லாமல் நானில்லை,  தனியாக ஒரு பெண் நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடந்து செல்லும் போது தான் நாடு சுதந்திரம் அடைகிறது. ஆனால் தற்போது நடந்து சென்றால் காதோடு இருப்பதை அறுத்து சென்று விடுவார்கள். பல்வேறு கட்சிகளில் பரப்புரை ஆடம்பர மேடை அமைத்து பெரிய பொருள் செலவில் கோடிகணக்கில் செலவு செய்வார்கள். ஆனால் நான் தரையில் நாற்காலி போடு நான் வந்து வாக்கு கேட்கிறேன் என தெரிவித்தேன்.  தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது பெண்கள். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம்,  அதற்கு வாக்களியுங்கள் என ராமதாஸ் கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்துட்டாங்க- பிரேமலதா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios