Asianet News TamilAsianet News Tamil

குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்..! கைது செய்ய வாய்ப்பு..! அலறி துடிக்கும் ராமதாஸ்

குவைத்தில் பணியாற்றும் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எனவே  மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Ramadoss expressed fear that 12 thousand engineers may lose their jobs in Kuwait
Author
First Published Nov 17, 2022, 11:43 AM IST

பொறியாளர்களின் வேலைக்கு ஆபத்து

குவைத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் இந்திய பொறியாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் அரசு பிறப்பித்திருக்கும் பொருத்தமற்ற நிபந்தனை காரணமாக, அங்கு பணியாற்றி வரும்  5,000&க்கும் மேற்பட்ட தமிழக பொறியாளர்கள் உள்ளிட்ட 12,000 இந்திய பொறியாளர்கள் பணியிழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்திய கல்வி நிறுவனங்களின் அங்கீகார முறை குறித்து அறியாததால் குவைத் அரசு விதித்திருக்கும் புதிய நிபந்தனையிலிருந்து இந்திய பொறியாளர்களை விடுவிக்க குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

கால்பந்து வீராங்கனை பிரியா இல்லத்திற்கு சென்ற முதல்வர்.. ரூ.10 லட்சம் நிதி, அரசு வேலை, வீடு வழங்க ஆணை..!

தடையின்மை சான்றிதழ் கட்டாயம்

குவைத்தில் பணியாற்றும் இந்திய பொறியாளர்கள் விசா நீட்டிப்பு பெற வேண்டும் என்றால், அதற்கு குவைத் பொறியாளர்கள் சங்கத்திடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று குவைத் அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்திய தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற  இந்திய பொறியாளர்களுக்கு மட்டும் தான் தடையின்மை சான்று வழங்க முடியும் என குவைத் பொறியாளர்கள் சங்கம் கூறுகிறது. இதனால் இந்தியாவில் ஐஐடி, என்.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் படித்தவர்களால் கூட குவைத் பொறியாளர் சங்கத்தின் தடையின்மை சான்றிதழை பெற முடியவில்லை.

ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்..! ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்- முத்தரசன் அதிரடி

Ramadoss expressed fear that 12 thousand engineers may lose their jobs in Kuwait

இந்தியாவில் நடைமுறைக்கு வரவில்லை

இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிமையானது. ஆனால், குவைத் அரசின் புரிதலின்மை காரணமாகவே பல ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்படும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அங்கீகார வாரியத்தின்(National Board of Accreditation -NBA) அங்கீகாரம்  பெற்ற பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டும் தான் உண்மையான பொறியாளர்கள் என்றும், மற்றவர்கள் போலி பட்டம் பெற்றவர்கள் என்றும் குவைத் கருதுகிறது. ஆனால், இது உண்மையல்ல.இந்தியாவை பொறுத்த வரை பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் மட்டுமே கட்டாயம்ஆகும்; தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் இன்று வரை கட்டாயமாக்கப்படவில்லை. 2022-ஆம் ஆண்டு  முதல் தான் தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதுவும் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. 

Ramadoss expressed fear that 12 thousand engineers may lose their jobs in Kuwait

கைது செய்ய வாய்ப்பு

இத்தகைய சூழ்நிலையில்,  குவைத்தில் 20, 30 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களிடம் தேசிய அங்கீகாரச் சான்று கேட்டால் அவர்களால் தாக்கல் செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு தடையின்மை சான்று கிடைக்காது.  அதனால், அவர்கள் வேலையிழப்பது மட்டுமின்றி, கைது செய்யப்பட்டு குடும்பத்துடன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்து உள்ளது. இது பொறியாளர்களின் வாழ்வில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கல்வித்தகுதியும், அனுபவமும் பெற்ற இந்திய பொறியாளர்கள், குவைத் அரசின் தவறான புரிதல் காரணமாக வேலையிழப்பதை அனுமதிக்க முடியாது.

குவைத்தில் இந்திய பொறியாளர்களின் வேலைவாய்ப்பை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அதனால், குவைத் அரசுடன் பேசி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்ற பொறியாளர்கள் அனைவருக்கும் வேலையும், விசாவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக பொறியாளர்களும் இதில் பாதிக்கப்படுவர் என்பதால் இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஜல்லிக்கட்டு போட்டி உரிமை பறிபோய்விடுமா.? அச்சத்தை உண்டாக்கும் வழக்கு.! திமுக அரசு மீது சீறிய ஆர்.பி.உதயகுமார்

Follow Us:
Download App:
  • android
  • ios