ஜல்லிக்கட்டு போட்டி உரிமை பறிபோய்விடுமா.? அச்சத்தை உண்டாக்கும் வழக்கு.! திமுக அரசு மீது சீறிய ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிறோம் என்று விளம்பரம் தேடுகிற தி.மு.க அரசு, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஜல்லிக்கட்டு உரிமையை பறிகொடுத்து விடுமோ? என்கிற ஒரு அச்சம் நிலவுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
 

RB Udayakumar has said that there is a fear that the Jallikattu competition will be banned by the Supreme Court

ஜல்லிக்கட்டு போட்டி- உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு உரிமையை மீண்டும் பறிபோய் விடுமோ என்கிற ஒரு அச்சம் இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் மத்தியிலே விவாதமாக இன்றைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது. காரணம்  உச்சநீதிமன்றத்திலே பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கிலே இதுக்கு தமிழக அரசு காலஅவகாசம் கேட்டிருப்பது நம்முடைய கவலை அதிகரிக்க செய்திருக்கிறது.

ஆகவே இன்றைக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிறோம் என்று விளம்பரம் தேடுகிற தி.மு.க அரசு இந்த வழக்கை தலைசிறந்த சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, தலை சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டுமே ஒழியே,கால அவகாசம் கேட்பது என்பது ஜல்லிக்கட்டு உரிமையை இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு விட்டுக் கொடுத்து விடுமோ என்கிற ஒரு அச்சம் இன்றைக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

பொதுமக்களுக்கு குட் நியூஸ்..! மெட்ரோ ரயில், பஸ், மின்சார ரயில் பயணிக்க ஒரே டிக்கெட்.! மு.க.ஸ்டாலின் ஆலோசனை

RB Udayakumar has said that there is a fear that the Jallikattu competition will be banned by the Supreme Court

 தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நவம்பர் 23 துவங்கும் என என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது, இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தான் இன்றைக்கு நம்முடைய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உடைய கேள்வியாக இருக்கிறது. இதற்கு  பீட்டா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனாலும் நீதி அரசர்கள் தமிழக அரசினுடைய கோரிக்கை மனுவை நிராகரித்திருக்கிறார்கள். இதுதான் அச்சத்திற்கு அடித்தளமாக இருக்கிறது. இதுதான் அச்சத்திற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. ஆகவே ஏற்கனவே அறிவித்தபடி 23ம் தேதி விசாரணை துவக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதை அடிப்படையாக வைத்து தலைசிறந்த சட்ட வல்லுநர்களை வைத்துக் கொள்ள வேண்டும் நம்முடைய உரிமையை காத்து தர வேண்டும். 

RB Udayakumar has said that there is a fear that the Jallikattu competition will be banned by the Supreme Court

சட்ட போராட்டம் நடத்திய அதிமுக

வீரத்தையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் ,நாகரீகத்தையும் தமிழ் சமுதாயத்தின் உயிருக்கும் மேலான நேசிக்கிற இந்த ஜல்லிக்கட்டு உரிமையை இந்த திமுக அரசு பறி கொடுத்து விடுமோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.  அம்மா ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டப்பட்டது. 11.7.2011 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்தனர்.  2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட இளைஞர்கள் நாடெங்கும்  ஒரு கட்டுப்பாடுடன் ஒரு மௌன புரட்சியாக தொடங்கி அந்த புரட்சி பல்வேறு வகையிலே விரிவடைந்து ஒட்டுமொத்த உலக தமிழினமும் ஓரிடத்திலே அன்றைக்கு ஒரு உரிமையை போராட்டத்தை ஒரு உரிமை புரட்சியை அன்றைக்கு எழுப்பியதைக் கண்டு உலக கவனத்தை ஈர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 19.1.2017  சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியை பாரத பிரதமருக்கு அம்மாவின் அரசு அனுப்பி வைத்தது. அதேபோல 20.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்காக அனுப்பப்பட்ட அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதல் பெறப்பட்டது.

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்திற்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை.! வானிலை மையம் தகவல்

RB Udayakumar has said that there is a fear that the Jallikattu competition will be banned by the Supreme Court

திமுக அரசு என்ன நடவடிக்கை

தமிழ் பாரம்பரியம், இனம், மொழி, அனைத்திலும் வீரத்தின் அடையாளமாக இருக்கின்ற, ஜல்லிக்கட்டு உரிமையை திராவிட முன்னேற்றக் கழக அரசு பறிகொடுத்து விடுமோ? என்கிற அச்சம் இன்றைக்கு தமிழ் சமுதாயத்தில், உலக தமிழ் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தலை சிறந்த வழக்கறிஞர்கள் கொண்டு தொடர்ந்து நடைபெறுகிற உச்ச நீதிமன்றத்திலே அந்த வழக்கில் இந்த அரசு கவனிக்க வேண்டும்.  அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆண்டுதோறும் தை திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை தொடர்ந்து நடைபெற அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முன் வருமா.? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்..! ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்- முத்தரசன் அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios