ramadoss demands to release tamil fishermen
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் கடந்த 61 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடந்த 14-ந் தேதி இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கோட்டைபட்டினம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் நெடுந்தீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இந்தியர்களின் ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 5 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் சிறைபிடிக்கப்பட்ட படகையும் விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கைது செய்யபட்டிருப்பது கண்டிக்கதக்கது எனவும், இலங்கை கடற்படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். .
இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யபடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமாதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
