திருமாவளவனை திட்டி பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக ராமதாஸ் கருத்து கூறியதைப்போல போலிப்பதிவை உருவாக்கி விசிகவினர் பரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

’’காயத்திரி ரகுராம் வேண்டுமானால் ஹெச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ துணைக்கு அழைத்துக் கொள்ளட்டும். பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்க வன்னியர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. காலம் மலையேறி விட்டது. எங்களுக்கும் புத்தி வந்து விட்டது என்று அவரிடம் சொல்லுங்கள்’’ என பாமக நிறுவனர் ராமதாஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை 10.10 மணிக்கு பதிவிட்டு இருந்ததாகவும், அதை 9 ஆயிரத்து 969 பேர் ரீட்வீட் செய்திருந்ததை போலவும், 5 ஆயிரத்து 453 பேர் லைக் செய்திருந்தாகவும் சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் உலாவருகிறது.

இதனைப் பார்த்தவர்கள் ஒரு கணம் அதிர்ச்சியாகி வருகின்றனர். ஆனால், ராமதாஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இப்படி இரு நிலைப்பதிவு இல்லைவே இல்லை.  போட்டோஷாப் செய்து இப்படியொரு பதிவை பகிர்ந்து வருவது தெரிகிறது. 

அதாவது கோயிலை விமர்சித்து திருமாவளவன் பேசியதை கண்டித்து செருப்பால் அடிப்பேன் என நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்திரி ரகுராம் திட்டியதை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில்  ராமதாஸையும் கோர்த்து விடும் வகையில் இந்த புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.