பாமக கொடியை ஏற்றி வைத்துவிட்டு மேடையில் தேம்பி தேம்பி அழுத ராமதாஸ்.. அதிர்ந்து போன பாட்டாளிகள்.
84வது பிறந்த நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்த அக்கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ் தனது தாய்க்கு கவிதை வாசித்தபடியே தேம்பித் தேம்பி அழுதார்.
84வது பிறந்த நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்த அக்கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ் தனது தாய்க்கு கவிதை வாசித்தபடியே தேம்பித் தேம்பி அழுதார். இந்த காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய தலைவர்களில் ஒருவராகவே ராமதாஸ் இருந்து வருகிறார், அன்பாக இருந்தாலும் சரி கோபமானலும் சரி அதை அதிகமாக வெளிப்படுத்தி விடுவார். இதற்கு அவரின் பல மேடை சம்பவங்களே சாட்சி, இந்த வரிசையில் தனது பிறந்த நாளையொட்டி சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் தனது அம்மாவுக்கு கவிதை வாசித்த போது ராமதாஸ் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
முழு விவரம் பின்வருமாறு:- பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தற்போது தமிழகத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார், கடந்த 25ஆம் தேதி 84 வது வயதில் அவர் அடியெடுத்து வைத்துள்ளார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை அக்கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த வரிசையில் இந்த ஆண்டு அவரது சொந்த ஊரான கீழ்சிவிரி என்ற ஊரில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் கிராம மக்கள் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையும் படியுங்கள்: கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !
பல ஆண்டுகளுக்குப் பின்னர் உறவினர்களுடன் சொந்த கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதாக கூறப்படுகிறது, இதற்காக தைலாபுரம் தோட்டத்தில் இருந்து 25 ஆம் தேதி காலை புறப்பட்ட அவருக்கு அவரது கிராமத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது கிராமத்தில் மத்தியில் அமைந்துள்ள பாமக கொடியை அவர் ஏற்றி வைத்தார்.
இதையும் படியுங்கள்: இந்துக்கள் நடத்தும் பள்ளியில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது.. கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளி.? அர்ஜூன் சம்பத்
பின்னர் அவர் பிறந்து வளர்ந்த பூர்விக இல்லத்திற்கு சென்றார், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது பெற்றோர்களின் புகைப்படத்தைப் பார்த்து ராமதாஸ் குமுறி குமுறி அழுதார். பின்னர் அங்கிருத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை வந்தார். அங்கு உரையாற்றிய அவர் தனது கிராமத்திற்கு தனது அம்மாவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கவிதை ஒன்று வாசித்தார்.
" என்ன தவம் செய்தேனோ.. இம்மண்ணில் நான் பிறக்க. எது தவம் செய்தேனோ உங்களோடு இன்று நான் இருக்க முந்தி தவமிருந்து முன்னூறு நாள் சுமந்து என்னை ஈன்றெடுத்த தாயே எனக்கொரு வரம் தருவாய் ஏழு பிறப்பும் உன் வயிற்றில் நான் பிறக்க அருள்புரிவாய் என கவிதையை வாசித்தபோது ஏன் மேடையில் தேம்பி தேம்பி அழுதார் ராமதாஸ்.
கண்ணீர் மல்க அழுவதை கண்டு அங்கிருந்த பாட்டாளி கல் உணர்ச்சி வயத்தில் உறைந்து போயினர் பின்னர் மேடையில் தனது சொந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் 84 ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் தன்னால் நடக்க முடியவில்லை என்றாலும் இந்த பூமி ஜனங்களுக்காக பாடுபடுவேன் என கூறினார்.