Asianet News TamilAsianet News Tamil

ராமதாஸ் அடாவடித்தனம் பண்ணாதீங்க.. சூர்யாவை சீண்டாதிங்க.. பாமகவை டார் டாராக கிழித்த சவுக்கு சங்கர்.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அந்த திரைப்படம் ஓடக் கூடாது என பாமக மாணவரணி செயலாளர் திரைப்பட உரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார். இது அராஜகம், ஒரு 5 செகண்டுக்கு  காலண்டர் வைத்து விட்டார்கள் என்பதற்காக சூர்யா உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா?

Ramadas don't atrocity .. Dont distrub Surya .. Savukku Shankar who critiized pmk.
Author
Chennai, First Published Mar 9, 2022, 11:11 AM IST

தொடர்ந்து சூர்யாவுக்கு எதிராக அராஜகம் செய்வதை பாமகவினர் நிறுத்தவேண்டும், அதை அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் கண்டிக்க வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். தொடர்ந்து நடிகர்களை சீண்டினால் விளம்பரம் கிடைக்கும் என்ற மலிவான அரசியலை பாமக செய்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ரஜினியின் பாபா படம் தொடங்கி நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் வரை அடிக்கடி சினிமா நடிகர்களை டிஸ்ட்ரப் செய்யும் அரசியலை பாமக செய்து வருகிறது என்பது ஊரறிந்த உண்மை. எப்போதெல்லாம் அக்கட்சிக்கு வீழ்ச்சி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சினிமா நடிகர்களை வம்பிழுப்பது பாமகவின் விளம்பர அரசியல் என்பது அக்கட்சியின் மீதான விமர்சனமாக இருந்துவருகிறது.

இதையும் படியுங்கள்; Surya's ET : ஜெய்பீமை தொடர்ந்து எதற்கும் துணிந்தவனை மிரட்டுவதா.? பாமகவை புரட்டி எடுத்த எழுத்தாளர் சங்கம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம்  திரைப்படத்திற்கு பாமகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படத்தில் காடுவெட்டி குருவையும், வன்னியர்களின் அடையாளச் சின்னமான அக்னி கலசத்தையும் அப்படத்தில் தவறாக காண்பித்து விட்டதாக கூறி பாமகவினர் மற்றும் பல்வேறு வன்னிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை ஓயப்போவதில்லை என்று  எச்சரித்ததுடன் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமகவினர் அறிவித்தனர். அது அப்போது 

Ramadas don't atrocity .. Dont distrub Surya .. Savukku Shankar who critiized pmk.

கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, பாமகவினரின் இந்த பேச்சை பலரும் கண்டித்தனர். சினிமா ரசிகர்களை சீண்டுவதே பாமகவின் வாடிக்கையாக இருக்கிறது, பாமகவின் இந்த செயல் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் விமர்சனங்கள் எழுந்தது.இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் அந்த சர்ச்சைக்குரிய காட்சிக்கு மன்னிப்பு கேட்டதை அடுத்து பிரச்சனை ஓய்ந்தது. ஆனால் பாமகவிலுள்ள ஒருசில மாவட்ட செயலாளர்கள் இனி நடிகர் சூர்யாவோ அல்லது அவரின் தம்பி கார்த்திக்கின் திரைப்படங்கள் திரைக்கு வந்தால் நிச்சயம் அதை பாமகவினர் எதிர்ப்போம் என்று எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் மார்ச் 10ஆம் தேதி நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்களிடம்  அம்மாவட்ட பாமகவினர் மனுவொன்று அளித்துள்ளனர். அதில், நடிகர் சூர்யா நடித்து வெளியான  ஜெய்பீம் திரைப்படத்தில் பாமகவினர் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அப்படத்திற்கு இதுவரை அவர் மன்னிப்புக் கோரவில்லை, இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ளது, எனவே சூர்யா வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை கடலூர் மாவட்டத்தில் அவரது திரைப்படம் ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளனர். பாமகவினர் இந்த நடவடிக்கை பலரையும் அதிர வைத்துள்ளது. முடிந்து போன ஒரு விஷயத்தை மீண்டும் பாமகவினர் தூண்டுவது சரியல்ல என்றும் எச்சரித்து வருகின்றனர். அந்த வரிசையில் மூத்த ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகர்கள் ஒருவருமான சவுக்கு சங்கர் பாமகவின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார்.

Ramadas don't atrocity .. Dont distrub Surya .. Savukku Shankar who critiized pmk.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் விவரம் பின்வருமாறு:-  சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அந்த திரைப்படம் ஓடக் கூடாது என பாமக மாணவரணி செயலாளர் திரைப்பட உரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார். இது அராஜகம், ஒரு 5 செகண்டுக்கு  காலண்டர் வைத்து விட்டார்கள் என்பதற்காக சூர்யா உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா? இப்படி தொடர்ந்து நடந்தால் இது எங்கே போய் முடியும்? வன்னியர் சமூகத்தின் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்து கொண்டிருக்கிற ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும். சூர்யாவின் படத்தை திரையிடக்கூடாது என பாமகவின் மாணவரணி செயலாளர் எழுதிய கடிதம் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு தெரியாதா? அப்படி என்றால் நாட்டில் யாரும் படம் எடுக்க கூடாதா?

இதையும் படியுங்கள்; பாகிஸ்தானியரை மீட்ட இந்தியா...! மோடியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் பெண்...!

இதுநாள் வரை தலித்துகளை ஒடுக்கி வருகின்றார்கள், ஜெய்பீம் திரைப்படத்தில் அந்த அளவுக்கு என்ன வன்னியர்களை இழிவு படுத்தி விட்டார்கள். ஜெய்பீம் பட விவகாரம் ஏற்கனவே முடிந்து விட்டது, ஆனால் இப்போது வரப்போகிற திரை படத்திருக்கும் வன்னியர் சமூகத்திற்கும் என்ன பிரச்சனை? இப்படி செய்வது தவறு என ராமதாஸ் அக்கட்சியனருக்கு அறிக்கை வெளியிடுவாரா? அப்படி கொடுத்தால் பாமகவை விமர்சிப்பது நான் இதுதுடன் நிறுத்திக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios