Asianet News TamilAsianet News Tamil

தன்னை நம்பிய வன்னிய மக்களையே ராமதாஸ் ஏமாற்றுகிறார்.. திருமாவளவன் தாறுமாறு அட்டாக்..

ராமதாஸ் தன்னுடைய சமூகத்தை வெளிப்படையாகவே ஏமாற்றுகிறார். 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. இது அவருக்கே நன்றாக தெரியும். தேர்தல் பேரம் பேசுவதற்காகவும், பேர வலிமையை கூட்டுவதற்காகவும் அவர் கையாளும் யுக்தி. அவரை எந்த சமூகம் நம்புகிறதோ, தன்னை நம்பும் சமூகத்திற்கே மிகப்பெரிய துரோகம் செய்கிற வகையிலே இந்த காய்களை ராமதாஸ் நகர்த்துகிறார்.  

Ramadas deceives the people of the Vanniyars who believe in him .. Thirumavalavan Criticized
Author
Chennai, First Published Jan 20, 2021, 11:28 AM IST

20% இடஒதுக்கீட்டில் எடப்பாடி தரப்பும் -ராமதாஸ் தரப்பும் சேர்ந்து நாடகம் நடத்துவதாகவும், இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என ராமதாசுக்கும் தெரிந்தும் ஆனால் தன்னை சார்ந்த சமூகத்திற்கே அவர் துரோகம் செய்து வருகிறார் என தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  உலகமே திரும்பி பார்க்கும் வகையில் அறப்போட்டத்தில் விவசாய பெருங்குடி மக்கள் டெல்லியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை மோடியின் தலைமையிலானை கார்பரேட் அரசு பொருட்படுத்தவில்லை.

 Ramadas deceives the people of the Vanniyars who believe in him .. Thirumavalavan Criticized

அவர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இடைகால தடைவிதித்து உச்சநீதிமன்றம் அமைத்த குழுவும் அரசுக்கு ஆதரவான குழு என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்கள். வரும் 26-ம் தேதி டெல்லியில் டிரக்டர் பேரணி நடத்த திட்டமிடப் பட்டுள்ளது இதனால் பெரும் நெருக்கடி, சட்டசிக்கல் ஏற்படவாய்ப்புள்ளது. அரசே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகளின் உயிர் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. மோடி அரசு விவசாயிகளுடன் முரண்டு பிடிக்கும் போக்கை கைவிட வேண்டும். 3 சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு வேளாண் தொடர்பான சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் இல்லை. மாநில அரசுகள் தான் இதை செய்ய முடியும். தமிழக அரசு மாநில உரிமைகள் பறிபோனாலும் அதை பற்றி கவலைபடாமல் மோடி அரசின் கட்டுப்பாட்டில் சிக்கி சுதந்திரமாக செயல்படாத நிலையில் உள்ளது. கிட்டதட்ட எடப்பாடி தலைமையிலான அரசு மோடி அரசின் விரும்பத்திற்கு ஏற்ப ஆட்டம் போடும் பொம்பலாட்ட அரசாக தான் விளங்குகிறது.  

Ramadas deceives the people of the Vanniyars who believe in him .. Thirumavalavan Criticized

மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி Msv சட்டத்தை இயற்ற வேண்டும். வரும் 26-ம் தேதி நடைபெறும் விவசாயிகள் ஆர்பாட்டத்திற்கு விசிக ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டங்களை துவங்க பிரமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தது குறித்து கேட்டதற்கு. இது தமிழக அரசின் முடிவுற்ற திட்டங்களை நடைமுறை படுத்துவதற்கு அல்ல. கூட்டணி அரசிலை உறுதிபடுத்தும் ஒரு அழைப்பாகவே யூகிக்க முடிகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டை சனாதான சக்திகளிடம் ஒப்படைக்ககூடிய வகையிலே அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ப்களிக்கும் வகையில் அதிமுக ஈடுபடுகிறது. இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோக செயல் ஆகும். அவர்கள் நம்புகிற தலைவர்கள், போற்றுகிற, வணக்குகிற தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். ஜெயலிதா அவர்கள் வெளிப்படையாக பா.ஜ.கவை எதிர்த்தவர். 

Ramadas deceives the people of the Vanniyars who believe in him .. Thirumavalavan Criticized

சொங்கோட்டையன் சொல்வது உண்மை என்றால் பா.ஜ.கவினருடன் கூட்டணி இல்லை, ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதை அதிமுக வெளிப்படையாக அறிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் நம்பலாம்.சசிகலா தண்டனை காலம் முடிந்து வருகிறார் அவ்வளவு தான். அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் குரல் சசிகலா பக்கம் எழுந்துள்ளது.

எல்லையோர பிரச்சனைகளை எப்போதுமே பதற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைபாட்டை செயல்திட்டமாகவே மோடி அரசு கொண்டுள்ளது. சுமூகமாக தீர்வு எட்டாமல் எல்லையோரத்தை பதற்றமாகவே வைத்திருப்பது பா.ஜ.கவின் அரசியலுக்கு உதவும் என நம்புகிறது. கொரோனா தடுப்பூசி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உலக சுகாதார நிறுவனம் 3 கட்ட பரிசோதனையை முடித்த பிறகு தான் அதை அங்கீகரிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால் 3 கட்ட பராசோதனையை முடிக்காமல், அங்கிகாரத்தை பெறுவதற்குள் அவசர அவசரமாக இதை மக்கள் இடத்தில் கொண்டுவந்து பரிசோதிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. கோவிஷீல்டை பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் கோவாக்சின் கொரோனா (பாரத்பயோடெக்) தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது ஏன்? இது மோடி போன்றவர்களுக்கு மிக நெருக்கமான நிறுவனம் என சொல்லப்படுகிறது. 

Ramadas deceives the people of the Vanniyars who believe in him .. Thirumavalavan Criticized

கோவாக்சினை தற்போதைக்கு நிறுத்தி வைப்பது மக்களுக்கு செய்யும் நல்ல காரியம். புதுச்சேரி அரசியல் மாறுபட்ட அரசியல். நாங்கள் இன்னும் திமுக கூட்டணியில் தான் உள்ளோம் அதே நிலை தொடரும். மாபெரும் வெற்றி பெறும். ராமதாஸ் தன்னுடைய சமூகத்தை வெளிப்படையாகவே ஏமாற்றுகிறார். 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. இது அவருக்கே நன்றாக தெரியும். தேர்தல் பேரம் பேசுவதற்காகவும், பேர வலிமையை கூட்டுவதற்காகவும் அவர் கையாளும் யுக்தி. அவரை எந்த சமூகம் நம்புகிறதோ, தன்னை நம்பும் சமூகத்திற்கே மிகப்பெரிய துரோகம் செய்கிற வகையிலே இந்த காய்களை ராமதாஸ் நகர்த்துகிறார். எடப்பாடி தரப்பும் -ராமதாஸ் தரப்பும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது. நான் அந்த மக்களுக்கான இடஒக்கீடு கோரிக்கைகை எதிர்க்கவில்லை. அது கூடாது என்றும் நான் கூறவில்லை. ஆனால் இந்த 20% எங்கிருந்து எடுக்க முடியும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios