Asianet News TamilAsianet News Tamil

ராமர் கோயில் கட்டும் பணி... பூமி பூஜை திடீர் ரத்து ஏன்.?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை இந்தியா சீனா இடையே எல்லையில் நடக்கும் சண்டை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

Rama Temple building ... Bhoomi Pooja sudden cancellation.
Author
India, First Published Jun 18, 2020, 8:36 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை இந்தியா சீனா இடையே எல்லையில் நடக்கும் சண்டை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Rama Temple building ... Bhoomi Pooja sudden cancellation.

உத்தர பிரதேசம். அயோத்தியில்  ராமர் கோவில் கட்டுவதற்காக 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குள் சிக்கி இருந்தது. இந்த நிலம் உரிமைக்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் பாபர் மசூதிக்கு தனியாக 5ஏக்கர் நிலமும் ராமர் கோவில் கட்டுவதற்காக சர்ச்சையில் இருந்த இடத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து உத்தரவு வழங்கியது.

 அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக "ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார். சம்பத் ராய் செயலாளராக நியமிக்கப்பட்டார்.அயோத்தியில் தற்போதுள்ள ராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

Rama Temple building ... Bhoomi Pooja sudden cancellation.

 இந்நிலையில், ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் ஜூலை 2-ஆம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதற்கான பூமி பூஜை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அறக்கட்டளையின் செயலாளரான சம்பத் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில்.."நாட்டின் பாதுகாப்பே மற்ற எல்லா விஷயங்களை விடவும் முக்கியமானதாகும். எனவே இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை ஒத்திவைக்கப்படுகிறது. மற்ற விஷயங்களையும் கணக்கில் கொண்டு ஆராய்ந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும். எல்லையில் உயிரிழந்த நமது வீரர்களுக்கு எங்களது அஞ்சலியை செலுத்துகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் கட்டுமானப் பணிகள் தொடர்பாக முழுமையாக அறிந்து கொள்ள எதுவாக வியாழனன்று அறக்கட்டளைக்கான இணையதளம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது".

Follow Us:
Download App:
  • android
  • ios