Ram Nath Kovind for President Which parties support his candidature and how the scales weigh
பா.ஜனதா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்; தன் செல்வாக்கை பயன்படுத்தி உறவினர்களுக்கு சிபாரிசு செய்ய மறுத்தவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மூத்த சகோதரர் பேட்டி
உ.பி., மாநிலம், கான்பூர் புறநகர் மாவட்டம் , ஜின்ஜாக் நகர் கிராமமும், அதன் அருகே உள்ள பரூக் கிராமும் ராம்நாத் கோவிந்தின் மூதாதையர் கிராமங்களாக கருதப்படுகிறது.
இதில் ஜின்ஜாக் நகரில் தங்கி உள்ள அவரது, 76 வயது மூத்த சகோதரர் பியாரிலால் கூறியதாவது:-
சொந்த ஊரில் கொண்டாட்டம்
எனது சகோதரர் ராம்நாத் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்ததும், அதை உறுதி செய்து கொள்ள அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவருடன் பேச முடியவில்லை.
டெல்லியில் பல்வேறு தலைவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் தான் கிடைத்தது. ஜனாதிபதி வேட்பாளர் தகவல் கிடைத்ததும் எங்கள் சொந்த கிராமான பரூக்கில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர்.
எதிர்பார்க்கவில்லை
நான் ஜின்ஜாக் கிராமததில் ஒரு ஜவுளி கடை நடத்தி வருகிறேன்.
பள்ளி காலத்தில், ராம்நாத் நன்றாக படிப்பார். கல்லூரி படிப்புக்காக கான்பூர் நகரம் சென்றார். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவதற்காக அவர் டெல்லியில் தங்கி இருந்தார்.
அப்போதுதான் ஜன சங்க (பா.ஜனதாவின் முன்னோடி கட்சி) தலைவர் உஜ்ஜயின் ஹூக்கம் சந்த்துடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்த அளவுக்கு உயர்வு பெறுவார் என நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
எங்கள் தந்தை கிராம தலைவராகவும், ஆயுர்வேத டாக்டராகவும் இருந்தவர். இத்துடன் கிராமத்தில் மளிகை கடை மற்றும் ஜவுளி கடை நடத்தி வந்தார். நடுத்தர குடும்பத்தினரான நாங்கள் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தோம்.
நாங்கள் ஐந்து சகோதரர்கள்; மூன்று சகோதரிகளும் நன்றாக படித்தோம். ஒரு சகோதரர் ம.பி., மாநிலத்தில் கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். மற்றொரு சகோதரர் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். ராம்நாத் வழக்கறிஞராகி விட்டார். மற்ற சகோதரர்கள் தொழில் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடும்பத்தில் 27 பேர்
ராம்நாத் உறவினர் தீப்கார் என்பவர் கூறியதாவது:-
ராம்நாத்துக்கு நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, 27. அவர்களில் சிலர் நல்ல வேலை வாய்ப்பு வாங்கி தரும்படி ராம்நாத்திடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், ' வாழ்க்கையில் நான் பெற்ற வெற்றிக்கு என் சொந்த முயற்சி தான் காரணம். எனவே நீங்களும் கடினமாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும்' என, கூறிவிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்
