Asianet News TamilAsianet News Tamil

ராம் குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை. அப்படி என்றால்.??? 5 ஆண்டுகள் கழித்து பகீர்.. முதல்வருக்கு கோரிக்கை.

ஆனால் தடயவியல் அறிக்கையில் மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் அறிக்கைக்கு இடையில் முரண்பாடுகள் உள்ளதால், இந்த கொலையில் சந்தேகம் இருக்கிறது என்றும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பாகவே உயிர் இழந்திருக்க கூடும்

Ram Kumar was not electrocuted. If so. ??? 5 years later Shocking .. Request to the CMt.
Author
Chennai, First Published Oct 1, 2021, 10:05 AM IST

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த ராம்குமார் மரணத்தில் உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ராமராஜ் பகீர் கிளப்பியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இளம்பெண் சுவாதி, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அதிகாலையில் இந்த கொடூரம் நடந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான ஆட்சியின் போது நடந்த கொலை என்பதால், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 

Ram Kumar was not electrocuted. If so. ??? 5 years later Shocking .. Request to the CMt.

அதையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என போலீசாரால் கூறப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருதலை காதலால் இந்த கொலை செய்ததாக ராம் குமார் கூறியதாக போலீசார் கூறினர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திடீரென மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறினார். ஆனால் சுவாதி கொலை மற்றும் ராம்குமார் மரணத்தில் பல்வேறு சந்தேக கேள்விகளும் மர்மங்களும் தொளிவான விடையின்றி அப்படியே இருந்து வருகிறது. சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ராம்குமார் மரணத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பல்வேறு பூதாகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அவரது உடற்கூறு ஆய்வில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. ராம்குமார் உடலை ஆராய்ந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

Ram Kumar was not electrocuted. If so. ??? 5 years later Shocking .. Request to the CMt.

ஆனால் தடயவியல் அறிக்கையில் மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் அறிக்கைக்கு இடையில் முரண்பாடுகள் உள்ளதால், இந்த கொலையில் சந்தேகம் இருக்கிறது என்றும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பாகவே உயிர் இழந்திருக்க கூடும் என்றும், மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், எனவே இந்த மரணம் குறித்து மீண்டும் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளார். மேலும் தாங்கள் நீதிமன்றத்தை நம்பவில்லை என்றும், தமிழக முதல்வரை நம்பி இந்த கோரிக்கையை வைப்பதாகவும், ராம்குமார் மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முதல்வர் ஆவணச் செய்ய வேண்டும் என்றும் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios