தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் திமுகவின் திருச்சி சிவா, சிபிஎம்-மின் டி.கே. ரங்கராஜன், அதிமுகவின் விஜிலா ஆனந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோரின் பதவிகள் ஏப்ரல் 2ம் தேதியோடு காலியாக உள்ளன. இந்நிலையில் இந்தப் பதவிகளுக்கு மார்ச் 26 அன்று தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு  தாக்கல் மார்ச் 13 தொடங்குகிறது. மார்ச் 18 வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தேவைப்பட்டால் மார்ச் 26 அன்று தேர்தல் நடைபெறும். சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடுவார்கள். மார்ச் 30க்குள் தேர்தல் நடவடிக்கைகள் நிறைவுபெறும். இந்தத் தேர்தலில் திமுக சார்பில் 3, அதிமுக சார்பில் 3 பேர் உறுப்பினராவதற்கான எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளன.