மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வேட்பாளர் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓ.பி.எஸ் ஆதரவாளராக கே.பி.முனுசாமி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும், மூத்த தலைவர்களுள் ஒருவராகவும் உள்ளார். ஆட்சியில் எந்த பொறுப்பும் இல்லாததால், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்,  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகராக இருந்த, தம்பிதுரை, டெல்லி லாபிக்கு பொருத்தமானவர் என்ற வகையில் அவருக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிகிறது. டெல்லி லாபி மூலம் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இது ஒருபுறம் இருக்க கூட்டணி கட்சியினரான ஏ.சி.சண்முகம், தேதிமுகவின் சுதீஷ், வாய்ப்பு கேட்டு வந்தனர். அவர்களுக்கு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர்.