Asianet News TamilAsianet News Tamil

மிரட்டும் பிரேமலதா.. மிரளும் எடப்பாடி..? வேட்பாளர் அறிவிப்பதில் தாமதத்தின் பரபரப்பு பின்னணி..!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவி காலியாகிறது. இவர்களுக்கு பதில் புதிதாக 6 எம்.பி.க்களை தமிழக எம்எல்ஏக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். இதற்கான தேர்தல் மார்ச் மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.

Rajya Sabha election...AIADMK candidate announcing delay sensational background
Author
Tamil Nadu, First Published Mar 8, 2020, 4:26 PM IST

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியின் நெருக்கடியால் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் காலதாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவி காலியாகிறது. இவர்களுக்கு பதில் புதிதாக 6 எம்.பி.க்களை தமிழக எம்எல்ஏக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். இதற்கான தேர்தல் மார்ச் மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.

Rajya Sabha election...AIADMK candidate announcing delay sensational background

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோ ஆகிய 3 பேர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், அதிமுக சார்பில் போட்டியிடும் 3 பேர் பெயர்களை கட்சி தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. காரணம், அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க அதிமுக கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சீட் கேட்டு தலைமைக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். 

Rajya Sabha election...AIADMK candidate announcing delay sensational background

மறுபுறம் கூட்டணி கட்சியான தேமுதிக மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று கூறிவருகிறார். அதேபோன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் மாநிலங்களவை சீட் கேட்கிறார். அவருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்க பாஜகவும் அதிமுக தலைமையிடம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முரளிதரராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற நெருக்கடிகளால் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் ஆகி என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios